சீனாவில் கடுமையான லாக்டவுன்.. உலக நாடுகள் அச்சம்.. ஏன் தெரியுமா?

கொரோனாவின் பிடியில் சிக்கித் தவித்து வந்த உலகம் தற்போது தான் அதிலிருந்து படிப்படியாக மீளத் தொடங்கியுள்ளது. சீனாவின் இருந்து முதன் முதலாக தோன்றிய இந்த வைரஸ், தற்போது மீண்டும் சீனாவில் குடிகொண்டுள்ளதாக அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது.

இதன் காரணமாக ஏற்கனவே சீனாவின் பல நகரங்களில் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக 26 மில்லியனுக்கும் அதிகமாக மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடப்பதாக தகவல்காள் வெளியாகின.

சீனா லாக்டவுன் எதிரொலி.. கச்சா எண்ணெய் விலை மேலும் சரிவடையலாம்..!

லாக்டவுன் நீட்டிப்பு

லாக்டவுன் நீட்டிப்பு

இந்த நிலையில் தற்போது மீண்டும் லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளதா தி கார்டியன் செய்தி கூறுகின்றது. ஏற்கனவே கடந்த 10 நாட்களாக கொரோனாவால் முடங்கியிருக்கும் மக்கள், தற்போது நீட்டிக்கப்பட்டுள்ள லாக்டவுன் காரணமாக பெரும் சவால்களை எதிர்கொண்டுள்ளனர்.

 மோசமான சரிவு

மோசமான சரிவு

ஏற்கனவே உலகின் முதல் கொரோனா வைரஸ் என்ற சீனாவின் வுகான் நகரில் தோன்றியதாக கூறப்படும் நிலையில், தற்போதும் கூட அந்த நகரம் கொரோனாவால் மிக மோசமான பாதிப்பினை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. சீனாவின் மிகப்பெரிய நகரமான இதில், பொருளாதார நடவடிக்கைகளும் மிக மோசமான சரிவினைக் கண்டுள்ளன.

சீன அரசின் பூஜ்ய கொரோனா கொள்கை
 

சீன அரசின் பூஜ்ய கொரோனா கொள்கை

இதனிடையே சீன அரசு பூஜ்ய கொரோனா கொள்கை’ (Zero Covid policy) என்ற அடிப்படையில் கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்தியது. அதாவது சீனாவில் கொரோனா பாதிப்பு இல்லை என்ற நிலையை அடைவதற்காக, அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அந்த திட்டங்கள் பலன் அளித்த காரணத்தால் சீனாவில் கொரோனா கட்டுக்குள் வந்தது.

வுகான் நகரில் மோசமான பாதிப்பு

வுகான் நகரில் மோசமான பாதிப்பு

சர்வதேச பயணத்தை தடை செய்வது, பொருளாரம் மற்றும் வணிக ரீதியிலான தொடர்புகளை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டதால், சீன அரசின் நடவடிக்கைக்கு சில கண்டனங்களும் எழுந்தன. கொரோனா தொற்று கட்டுக்குள் வந்ததால், கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து சீன அரசு ஆலோசித்து வந்தது.

பூஜ்ய கொரோனா கொள்கை

பூஜ்ய கொரோனா கொள்கை

இந்த நிலையில் அங்கு மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால், சீனாவின் பூஜ்ய கொரோனா கொள்கை அடிப்படையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடரும் என அந்நாட்டு சுகாதாரத்துறை சமீபத்தில் அறிவித்திருந்தது. இந்த பூஜ்ய கொரோனா கொள்கையினால் கொரோனா பரவல் ஏற்பட்டுள்ள இடங்களை தீவிரமாக கண்காணித்து, அங்கிருந்து வேறு இடங்களுக்கு தொற்று பரவாத வகையில் தடுப்பதன் மூலம், முடிந்த அளவு விரைவாக கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தப்படும் என்றும் சீனா சுகாதார துறை கூறியிருந்தது.

பாதிப்பு என்ன?

பாதிப்பு என்ன?

சீனாவின் பூஜ்ய கொரோனா கொள்கையினால் சர்வதேச பயணத் தடை, பொருளாதாரம், வணிக ரீதியிலான தொடர்புகளை கட்டுப்படுத்துவது உள்ளிட பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் காரணமாக சீனாவின் பொருளாதாரம் மிக மோசமான சரிவினைக் காணலாம். சீனா மட்டும் அல்ல உலக நாடுகளே இதன் காரணமாக பெரும் பிரச்சனையை எதிர்கொள்ளலாம்.

பொருளாதாரத்தில் தாக்கம்

பொருளாதாரத்தில் தாக்கம்

ஓமிக்ரான் மாறுபாடு காரணமாக 4 நாட்கள் லாக்டவுன் முடிவடையவிருந்த நிலையில், தற்போது மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மேற்கோண்டு 26 மில்லியன் மக்கள் லாக்டவுனால் பாதிக்கப்பட்டுள்ளனர். பரவி வரும் பெருந்தொற்றானது மேற்கொண்டு பல பெரிய நகரங்களில் லாக்டவுன் அமல்படுத்த தூண்டுகிறது. இது பொருளாதாரத்தில் மீண்டும் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மோசமான பாதிப்பு

மோசமான பாதிப்பு

ஏற்கனவே உக்ரைன் – ரஷ்யா பிரச்சனைக்கு இடையே பெரும் தாக்கத்தினை எதிர்கொண்டுள்ள உலக நாடுகள், அதிகரித்து வரும் பெரும்தொற்றால் இன்னும் மோசமான நிலையினை எதிர்கொள்ளலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது சீனாவின் உற்பத்தியினை மிக மோசமான பாதிப்பினை எதிர்கொண்டுள்ள நிலையில், தேவையினையும் பாதித்துள்ளது. ஏற்கனவே சீனாவில் மார்ச் மாத தொழில்சாலை உற்பத்தியானது மோசமான வீழ்ச்சியினை கண்டுள்ளது. இது 2 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான வீழ்ச்சியினைக் கண்டுள்ளது.

சப்ளையிலும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்

சப்ளையிலும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்

இது சீனாவுக்கு மட்டும் அல்ல, உலக நாடுகளுக்கும் சப்ளை சங்கியிலில் பெரும் தாக்கத்தினை எதிர்கொள்ளலாம்.

இது மார்கிட்டின் PMI விகிதமானது பிப்ரவரி மாதத்தில் 50.4ல் இருந்து, மார்ச் மாதத்தில் 48.1 ஆக சரிந்தது. இது கடந்த பிப்ரவரி 2020-க்கு பிறகு மிக மோசமான வீழ்ச்சியினை பதிவு செய்துள்ளது.

 

மோசமான பாதிப்பினை ஏற்படுத்தலாம்

மோசமான பாதிப்பினை ஏற்படுத்தலாம்

ஏற்கனவே மார்கன் ஸ்டான்லியின் பொருளாதார வல்லுனர்கள் இந்த ஆண்டுக்கான சீனாவின் பொருளாதார வாளர்ச்சிக் கணிப்பினைக் கடுமையாக குறைத்துள்ளனர். இதே சிட்டி குழுமம் 2வது காலாண்டில் பெரும் சரிவினைக் காணலாம் எனவும் எச்சரித்துள்ளது. சீனாவின் பொருளாதார நிபுணர் டிர்ன் நகுயென், சீனாவின் பூஜ்ஜிய கொரோனா கொள்கையினால், பாதிப்பு மிக மோசமாக இருக்கும் என்று கணித்துள்ளார்.

 சப்ளை பாதிக்கலாம்

சப்ளை பாதிக்கலாம்

இது தேவை மற்றும் சப்ளையையும் பாதிக்கும். ஏற்கனவே சில நிறுவனங்கள் உற்பத்தியினை நிறுத்தியுள்ளன. ஆக இனியும் லாக்டவுன் நீட்டிப்பு என்பது இன்னும் மோசமான தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் சீனாவின் பொருளாதாரம் எண்ணெய் விலையையும் வீழ்ச்சி காணலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

China Lock down could further have an impact on the international economy

China Lock down could further have an impact on the international economy/சீனாவில் மீண்டும் லாக்டவுன் நீட்டிப்பு.. உலக நாடுகள் அச்சம்.. ஏன் தெரியுமா?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.