இலங்கை அதிபர் இல்லம் அருகே மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பெரும்பதற்றம் ஏற்பட்டது. போராட்டக்காரர்கள் அதிபர் இல்லத்துக்குள் நுழையலாம் என்ற சூழல் உண்டானது. போலீசார் துணை ராணுவத்தினர் தடுத்து நிறுத்தினாலும் போராட்டக்காரர்கள் முன்னேறி செல்ல முயன்றபடி இருந்தனர்.
இதனால் அதிபர் கோத்தபய ராஜபக்சே வீட்டு முன்பு ஏராளமான பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டனர். மக்கள் போராட்டம் காரணமாக அதிபர் கோத்தபய ராஜபக்சே அவரது வீட்டில் இருந்து அழைத்து செல்லப்பட்டு ரகசிய இடத்தில் தங்க வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆக்ரோஷமான போராட்டத்தால் கோத்தபய ராஜபக்சேவுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டு விடக்கூடாது என்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் ரகசிய இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டார். போராட்டம் காரணமாக பிரதமர் மகிந்த ராஜபக்சே, அமைச்சர்களின் வீடுகளுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.