ஏப். 19 வரை மீண்டும் முழு ஊரடங்கு – பிரதமர் எடுத்த முடிவு!

கொரோனா அச்சம் காரணமாக, அமலில் உள்ள முழு ஊரடங்கை, மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்க பிரதமர் முடிவு செய்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கொரோனா தொற்று இல்லாத நாடாக இருந்த சமோவாவில், இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு, ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, முதற்கட்டமாக, மூன்று நாட்களுக்கு
முழு ஊரடங்கு
உத்தரவை பிறப்பிக்கப்பட்டது.

இதை அடுத்து கொரோனா பரவல் வேகம் எடுத்ததை அடுத்து, அதை கட்டுப்படுத்த, அமலில் உள்ள முழு ஊரடங்கை, இரண்டு வாரங்களுக்கு, அதாவது வரும் ஏப்ரல் மாதம் 5 ஆம் தேதி வரை நீட்டித்து, பிரதமர் ஃபியமே நவோமி மாதாஃபா உத்தரவிட்டிருந்தார். அதன்படி, வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டும் அத்தியாவசியப் பொருட்கள் வாங்க பொது மக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

மீண்டும் முழு ஊரடங்கை நோக்கி இந்தியா – பிரதமர் மோடி திடீர் முடிவு?

இந்நிலையில், சமோவாவில் நாளுக்கு நாள் கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மார்ச் 30 ஆம் தேதி 172 ஆக இருந்த தினசரி பாதிப்பு, 31 ஆம் தேதி 170 ஆக குறைந்துள்ளது. கொரோனா தினசரி பாதிப்பு ஏற்ற இறக்கமாகவே காணப்படுவதால், அமலில் உள்ள முழு ஊரடங்கை, மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்க பிரதமர் ஃபியமே நவோமி மாதாஃபா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக அவர், சுகாதாரத் துறை அதிகாரிகளுடன், இந்த வாரத்தில் ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது. கொரோனா பரவல் அதிகரிக்கும் பட்சத்தில்
முழு ஊரடங்கு
நீட்டிக்கப்படலாம் என்றும், இது குறித்த அறிவிப்பு வரும் நாட்களில் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்திகோத்தபயா வீட்டுக்கு வெளியே “அட்டாக்”.. தீவிரவாதிகள் அட்டகாசம் இது.. அலறும் இலங்கை!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.