உக்ரைன் போர்: மீண்டும் தாக்குதல் நடத்துவதற்காக படை திரட்டும் ரஷ்யா… நேட்டோ அமைப்பு பரபரப்பு தகவல்


உக்ரைன் மீது மீண்டும் தாக்குதல் நடத்துவதற்காக ரஷ்யா மீண்டும் படை திரட்டி வருவதாக நேட்டோ அமைப்பு தெரிவித்துள்ளது.

உக்ரைனின் கிழக்குப் பகுதியில் தாக்குதலை இரட்டிப்பாக்குவதற்காக, ரஷ்யா மீண்டும் படைகளை ஒன்றுதிரட்டி வருவதாக நேட்டோ அமைப்பின் secretary general தெரிவித்துள்ளார்.

ரஷ்யா மீண்டும் படைகளை ஒன்றுதிரட்டவும், பொருட்களையும் படைவீரர்களையும் அதிகரிக்கவும் முயன்று வருகிறது என்று கூறியுள்ளார் நேட்டோ அமைப்பின் secretary generalஆன Jens Stoltenberg.
 

அத்துடன், ரஷ்யா 1,200 முதல் 2,000 படை வீரர்களை ஜார்ஜியா (Georgia) நாட்டிலிருந்து கொண்டு வருவதாக பிரித்தானியாவும் தெரிவித்துள்ளது.

ஒருபக்கம், வடக்கு உக்ரைனில் இராணுவ செயல்பாடுகளை குறைத்துக்கொள்ள இருப்பதாகவும், டான்பாஸ் பகுதியை விடுவிப்பதில் கவனம் செலுத்த இருப்பதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ள நிலையில், ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கைகளை தொடரும் நோக்கத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று கூறியுள்ளார் Stoltenberg.

காரணம், இன்னமும் உக்ரைன் நகரங்கள் மீது ரஷ்யா குண்டு மழை பொழிந்தவண்ணம்தான் உள்ளது. கிழக்குப் பகுதியில் ஒன்றுதிரள ரஷ்யப் படைகள் இடம்பெயர்வது போல் தெரிந்தாலும், Kyiv மற்றும் பிற நகரங்கள் மீது அழுத்தம் கொடுப்பதை ரஷ்யா தொடர்வதால், மீண்டும் அது தாக்குதல் நடத்தலாம் என்பதை எதிர்பார்க்கமுடிகிறது என்கிறார் அவர்.
 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.