புதிய நிதியாண்டு தொடங்கியாகிவிட்டது. பற்பல மாற்றங்களும் அமலுக்கு வந்து விட்டன. நம்மில் பெரும்பாலோர் வருமான வரி திட்டத்தை கடைசி நிமிடம் வரை விட்டு விடுகிறோம்.
ஆனால் உங்கள் நிதிக்கு நீங்கள் தான் பொறுப்பேற்க வேண்டும் என்பது போல, ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே திட்டமிட வேண்டும். இது வரிகளை திட்டமிட உதவும்.
வருமான வரிச்சட்டம் 1961ன் கீழ் தனிப்பட்ட வரி செலுத்துவோருக்கு பொருந்தகூடிய சில விதிமுறைகளை பார்க்கலாம் வருங்கள்.
கச்சா எண்ணெய் விலை 150 டாலராக உயரும்.. நடப்பதை மட்டும் பாருங்க..!
வரி விகிதங்கள்
2022-23ம் நிதியாண்டுக்கான வரி விகிதங்கள் எதுவும் மாறவில்லை. அதிகபட்ச வரி விகிதங்கள் 30% ஆக உள்ளது. இதில் கூடுதலாக உங்கள் வருமானத்திற்கு ஏற்ப கூடுதல் கட்டணம், சுகாதாரம் மற்றும் கல்விக்கான செஸ் வரி என, மொத்தமாக அதிகபட்ச மார்ஜினல் வரி விளிம்பாக 42.744% ஆக உள்ளது.
செலவுகள்/முதலீடுகளுக்கு விலக்கு உண்டு
வருமான வரி திட்டங்களில் விலக்கு பெற வருங்கால வைப்பு நிதி, பொது வருங்கால வைப்பு நிதி, ஈக்விட்டி லிங்க்டு சேவிங்க் ஸ்கீம் (ELSS), சுகன்யா சம்ரிதி யோஜனா, 5 வருட வரி சேமிப்பு டெபாசிட்கள் எனம் பல திட்டங்களில் 1,50 லட்சம் ரூபாய் வரையில், 80சியின் கீழ் விலக்கு பெறலாம்.
இது தவிர தேசிய ஓய்வூதிய திட்டத்திலும் முதலீடு செய்வதன் மூலம் 80CCD (1B)கீழ் 50,000 ரூபாய் வரையில் விலக்கு பெற,லாம்.
இன்சூரன்ஸ் பிரீமியத்துக்கு வரி விலக்கு
உங்களுக்கும், உங்களது மனைவி மற்றும் குழந்தைகளுக்கும் இன்சூரன்ஸ் பிரீமியம் செலுத்துவதன் மூலம் 25,000 ரூபாய் வரையிலும், பெற்றோருக்கு 25000 ரூபாய் வரையிலும் பிடித்தம் செய்ய அனுமதிக்கப்படுகிறது. மூத்த குடிமக்களுக்கு இந்த வரம்பு 50,000 ரூபாயாகவும் உள்ளது.
கல்வி கடனுக்கான வட்டிக்கு வரி விலக்கு
மேலும் உயர்கல்விக்காக எடுக்கப்பட்ட கல்விக் கடனுக்காக செலுத்தும் வட்டிக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. எனினும் இந்த சலுகையினை நீங்கள் முதல் தவணை செலுத்த தொடங்கியதில் இருந்து, 8 ஆண்டுகளுக்கு பிறகு வரி சலுகைகளை பெற அனுமதி கிடையாது. ஆக 8 ஆண்டுகளுக்குள் கல்விக் கடனை செலுத்தி விட்டால் இந்த பலனை பெற்றுக் கொள்ளலாம். எனினும் இந்த கல்விக் கடனை நிதி நிறுவனத்தில் இருந்தோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட தொண்டு நிறுவனத்தில் இருந்தோ அல்லது வங்கிகளில் இருந்தோ கல்விக் கடனை பெற்றிருக்க வேண்டும்.
நன்கொடை-க்கு சலுகையுண்டு
குறிப்பிட்ட நன்கொடைகளுக்கு வரிச் சலுகை பெற முடியும். நன்கொடை வழங்கு பவர்கள் தனி நபராகவோ அல்லது வெளிநாடு வாழ் இந்தியராகவோ, நிறுவனமாகவோ, கார்ப்பரேட் நிறுவனங்களாகவோ இருக்கலாம். இவர்களில் எந்தப் பிரிவினரும் வழங்கிய நன்கொடைக்கு 80ஜி பிரிவின் கீழ் சலுகை பெறலாம். ஒருவர் நன்கொடையாக வழங்கிய முழுத் தொகைக்கும் வரிச் சலுகை கிடைக்க நிபந்தனை இருக்கிறது. நன்கொடையின் தன்மையைப் பொறத்து தொகையில் 50 முதல் 100% வரிச் சலுகை கிடைக்கும்.
சொத்து வாங்க வாங்கும் கடனுக்கு வரி விலக்கு
ஒரு சொத்தினை வாங்குவதற்காக எடுக்கப்பட்ட கடனுக்கு செலுத்தப்படும் வட்டிக்கு 2 லட்சம் ரூபாய் வரையில் வரி சலுகையுண்டு.
இது தவிர நீண்டகால மூலதன ஆதாயங்களுக்கு வரி (LTCG) விலக்கு உண்டு. எனினும் இதற்கு நிபந்தனைகளுக்கு உட்பட்டு விலக்கு கிடைக்கும்.
வாடகை (HRA)
தனி நபர்கள் வீட்டு வாடகை (HRA) மூலம் வரி விலக்கு பெறலாம். வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 10 (13A) இன் கீழ், சில வரம்புகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு, நீங்கள் பெற்ற HRA தொடர்பாக, வரி விலக்கு பெற உங்களுக்கு உரிமை உண்டு. அடிப்படை சம்பளத்தில் 10% அதிகமான வாடகை செலுத்தப்படுகிறது. இதே நகரங்களின் அடிப்படையில் 50% (மும்பை, கொல்கத்தா, டெல்லி, அல்லது பெரு நகரங்களில் வசிக்கும் ஊழியர்களுக்கு கிடைக்கும். இதே 40% (மற்ற இடங்களில் வசிக்கும் ஊழியர்களுக்கு கிடைக்கிறது.
வாடகை வரி விலக்கு
வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80GG ஒரு நபர் செலுத்தும் வாடகையில் கழிக்க அனுமதிக்கிறது. இதை சுயதொழில் செய்பவர்களும், தங்கள் முதலாளிகளிடமிருந்து HRA பெறாத ஊழியர்களும் உரிமை கோரலாம். ஒருவரின் மொத்த வருவாயில் இருந்து ஒரு கழிவாக பலன் அனுமதிக்கப்படுகிறது. எவ்வாறாயினும், மொத்த வருமானத்தில் 25% அல்லது மொத்த வருவாயில் 10% க்கும் அதிகமாக செலுத்தப்படும்.
ஆக இதுபோன்ற வரிச்சலுகை பெற முன் கூட்டியே திட்டமிட்டு செயல்பட்டால் வரிச்சலுகையை பெற முடியும்.
How much income tax deduction is there for what? Who can get it?
How much income tax deduction is there for what? Who can get it?/இவ்வளவு வருமான வரி சலுகை இருக்கா.. எதற்கெல்லாம் கிடைக்கும்.. புதிய நிதியாண்டில் திட்டமிடுங்கள்..!