ஜி.எஸ்.டி.நிலுவைத் தொகை உட்பட தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 20ஆயிரத்து 860கோடி ரூபாயை உடனடியாக விடுவிக்க வேண்டும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து கோரிக்கை விடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்ததோடு, அங்குள்ள அரசுப் பள்ளி, மருத்துவமனையை பார்வையிட்டார்.
டெல்லியில் உள்ள நிதித்துறை அமைச்சகத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார்.
அப்போது, 14ஆவது நிதிக்குழு பரிந்துரைப்படி, உள்ளாட்சி அமைப்புகளுக்கான மானிய நிலுவைத் தொகையை விரைந்து விடுவிக்க கோரிக்கை விடுத்த முதலமைச்சர் 13ஆயிரத்து 504 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகை உட்பட தமிழகத்திற்கு வரவேண்டிய 20ஆயிரத்து 860 கோடி நிதியை விரைந்து விடுவிக்குமாறு வலியுறுத்தினார்.
இந்த சந்திப்பின் போது தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், திமுக எம்.பி டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.