வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புது டில்லி: கிரிப்டோகரன்சி வர்த்தகத்தின் மூலம் ஈட்டும் லாபத்தில் 30 சதவீதம் வரி பிடித்தம் செய்யும் சட்டம் புதிய நிதியாண்டின் தொடக்கமான இன்று முதல் (ஏப்., 1) அமலாகிறது.
இந்தியாவில் கிரிப்டோகரன்சி முதலீடு கடந்த சில ஆண்டுகளில் பல ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. 2022 – 23ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் கிரிப்டோகரன்சி வருவாய்க்கு 30 சதவீத வரி விதிக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். புதிய நிதியாண்டின் தொடக்கமான இன்று முதல் அந்த வரிச்சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.
ஒருவரது மொத்த ஆண்டு வருமான 2.5 லட்சம் ரூபாய்க்குள் இருப்பினும் அவர் கிரிப்டோகரன்சி வருவாய்க்கு 30 சதவீத வரி செலுத்த வேண்டும். அதன்படி 10 ஆயிரம் ரூபாய் லாபத்திற்கு ரூ.3 ஆயிரம் வரியாக செலுத்த வேண்டி இருக்கும். கிரிப்டோ முதலீடுகளை தவிர்க்க வேண்டும் என்பதற்காக அதிகபட்ச வரி விதிக்கப்படுகிறது.
அதே போல் ரூ.50 லட்சத்துக்கு மேல் உள்ள அசையாச் சொத்துக்களை விற்றால் 1 சதவீத வருமான வரி பிடித்தம் செய்வதற்கான திருத்தப்பட்ட விதிமுறைகள் இன்றிலிருந்து அமலாகின்றது. மேலும் அசல் வருமான வரி தாக்கலின் போது ஏதேனும் வருமானத்தை விட்டிருந்தால் அதனை புதுப்பித்து தாக்கல் செய்ய நிதியாண்டுக்கு ஒரு முறை வாய்ப்பு வழங்கும் அம்சமும் அமலாகியுள்ளது.
Advertisement