டெல்லியைப் போல தமிழகத்தில் மாதிரிப் பள்ளிகள்; கெஜ்ரிவாலுக்கு அழைப்பு விடுத்த ஸ்டாலின்

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டெல்லியைப் போல தமிழகத்திலும் மாதிரிப் பள்ளிகளை உருவாக்கி வருவதாகவும், அவற்றை பார்வையிட அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

4 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள மு.க. ஸ்டாலின், இன்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் டெல்லி அரசுப் பள்ளிக்குச் சென்றார். அங்கே ஆம் ஆத்மி அரசாங்கத்தின் கீழ் கல்வி முறையில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

டெல்லி அரசு கடந்த 6 – 7 ஆண்டுகளாகதனது பட்ஜெட்டில் 25 சதவீதத்தை கல்விக்காக தொடர்ந்து செலவிட்டு வருவதாக டெல்லி அதிகாரி ஒருவர் மு.க. ஸ்டாலினிடம் தெரிவித்தார்.

“2014-15-ம் ஆண்டில் 12ம் வகுப்பில், தனியார் பள்ளிகளைவிட, அரசுப் பள்ளிகள் 88 சதவீதம் தேர்ச்சி பெற்றிருந்தன. தனியார் பள்ளிகளில் 92 சதவீதம் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், 2019-20-ல் அரசுப் பள்ளிகளில் தேர்ச்சி 98 சதவீதமாக அதிகரித்துள்ளது” என்று கூறினார்.

டெல்லியின் மாதிரிப் பள்ளிகளை தென் மாநிலத்திலும் தனது அரசு உருவாக்கி வருகிறது என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறினார்.

“தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கல்வி, மருத்துவத் துறைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறோம். டெல்லியில் மாதிரிப் பள்ளிகள் எப்படி இயங்குகிறதோ, அதுபோலத் தமிழகத்திலும் செயல்படுகிறது. அங்கே பணிகள் முடிந்ததும் முதலமைச்சர் கெஜ்ரிவாலை அழைப்போம். அவர் வர வேண்டும், தமிழக மக்கள் சார்பில் அவரை அழைக்கிறேன்” என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறினார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் பேசிய டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி அரசுப் பள்ளிகளின் முதல்வர்கள் வெளிநாடுகளில் பயிற்சிக்கு அனுப்பப்படுவதாகவும், ஆசிரியர்களுக்கு இந்திய மேலாண்மை நிறுவனங்களில் பயிற்சி அளிக்கப்படுவதாகவும் கூறினார்.

டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் பேசுகையில், டெல்லி அரசு குழந்தைகளை மனப்பாடம் செய்யும் கற்றல் முறையில் இருந்து கவனத்துடன் புதிய கற்றலுக்கு நகர்த்தி வருகிறது என்று கூறினார்.

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கல்வி மற்றும் மருத்துவத் துறைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறோம். டெல்லியில் மாதிரிப் பள்ளிகள் எப்படி இயங்குகிறதோ, அதுபோலத் தமிழகத்திலும் செயல்படுகிறது என்று கூறினார்.

“அங்கு பணிகள் முடிந்ததும் முதலமைச்சர் கெஜ்ரிவாலை அழைப்போம். அவர் வர வேண்டும், தமிழக மக்கள் சார்பில் அவரை அழைக்கிறேன்” என்று மு.க. ஸ்டாலின் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அழைப்பு விடுத்தார்.

மு.க. ஸ்டாலின் ஆங்கிலப் பயிற்சி குறித்து கேட்டபோது, டெல்லி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க பிரிட்டிஷ் கவுன்சில் மற்றும் அமெரிக்க தூதரகத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளோம் என்று கெஜ்ரிவால் கூறினார்.

புதிய கல்வி வாரியம், மகிழ்ச்சியான பாடத்திட்டம், தேசபக்தி பாடத்திட்டம் மற்றும் தொழில் முனைவோர் திட்டம் – வணிகத்தில் சாதனை படைத்தவர்கள் குறித்தான பாடத்திட்டங்கள் குறித்து மு.க. ஸ்டாலினிடம் டெல்லி முதலமைச்சர் விளக்கினார்.

முதல் சில ஆண்டுகளில் பள்ளி உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் தனது அரசாங்கம் கவனம் செலுத்தியதாக கெஜ்ரிவால் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் கூறினார்.

“எங்களிடம் நீச்சல் குளங்கள் உள்ளிட்ட விளையாட்டு வசதிகள் உள்ளன. அரசு பள்ளிகளில் நீச்சல் பள்ளிகளை நினைத்துக்கூட பார்க்க முடியாது. எங்களிடம் நல்ல உள்கட்டமைப்பு உள்ளது. இரண்டாம் கட்டத்தில் அனைத்து பள்ளி முதல்வர்களையும் ஆசிரியர்களையும் பயிற்சிக்கு அனுப்ப ஆரம்பித்தோம். அவர்கள் இப்போது ஆற்றலுடனும் நம்பிக்கையுடனும் உள்ளனர். இப்போது நாங்கள் பள்ளிகளில் கற்பிக்கப்படும் உள்ளடக்கத்தில் கவனம் செலுத்துகிறோம்” என்று கெஜ்ரிவால் கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.