உக்ரைன் மீதான போரை நிறுத்தியுள்ள ரஷ்யா தனது வர்த்தகத்தையும் வருவாய் ஈட்டும் அனைத்து வழிகளையும் மேம்படுத்தி வருகிறது. ஒருபக்கம் தனது ரூபிள் நாணயத்தின் மதிப்பை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக ஐரோப்பாவிடம் ரூபிள் நாணயம் வாயிலாகப் பேமெண்ட் செய்தால் மட்டுமே கச்சா எண்ணெய் எரிவாயு அளிக்க முடியும் என அறிவித்துள்ளது.
இதேபோல் ரஷ்யாவின் மிக நெருங்கிய நட்பு நாடான சீனா மற்றும் துருக்கி நாடுகளுக்கு யுவான் அல்லது லிரா ஆகியவற்றின் வாயிலாகவும், தங்கத்தின் வாயிலாகவும் எண்ணெய் முதல் அனைத்து பொருட்களையும் அளிக்கச் சலுகை அளித்துள்ளது.
இந்நிலையில் இன்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு, ரஷ்யாவுக்கு இந்தியாவுடன் வர்த்தகம் எந்த அளவிற்கு முக்கியமானதாக உள்ளது என்பதைக் காட்டுகிறது.
ரஷ்யா- இந்தியா
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எதை வாங்க விரும்பினாலும், ஆலோசனை செய்து இரு தரப்புக்கும் சாதகமான முடிவுகளை எடுக்க நாங்கள் தயாராக உள்ளோம் என ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் இன்று கூறியுள்ளார்.
செர்ஜி லாவ்ரோவ்
ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் இன்று இந்தியா வந்துள்ள நிலையில் இந்திய வெளியுறவு அமைச்சரான ஜெய்சங்கர்-ஐ சந்தித்த போது “இந்தியா எங்களிடம் இருந்து எதையும் வாங்க விரும்பினாலும், பரஸ்பரம் ஏற்றுக்கொண்டு உரிய முடிவை எடுக்க ஒத்துழைப்பை அளிக்கத் தயார்” எனக் கூறினார்.
வர்த்தகம்
மேலும் இந்திய ரஷ்யா இடையேயான நட்புறவும் சிறப்பாக இருக்கும் நிலையிலும், இரு நாடுகளின் வெளியுறவுக் கொள்கை
சுதந்திரம் மற்றும் உண்மையான தேசிய நலன்களில் கவனம் செலுத்துகிறது. இதனால் இரு நாடுகள் மத்தியிலான வர்த்தகத்தில் எவ்விதமான தங்கு தடையும் இருக்காது எனச் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.
ரூபாய் – ரூபிள் நாணய பரிமாற்றம்
ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சரான ஜெய்சங்கர் ஆகியோரின் இந்த முக்கியச் சந்திப்பின் மூலம் இந்தியா ரூபாய் – ரூபிள் நாணய பரிமாற்றத்தை ஏற்றுக்கொண்டு கச்சா எண்ணெய்-ஐ வாங்க ஒப்புக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் மோடி
மேலும் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளது. மேலும் செர்ஜி லாவ்ரோவ் இரண்டு நாள் சீன பயணத்தை முடித்துக்கொண்டு இந்தியா வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் இந்திய பணத்தின் மூலம் இரு நாடுகளின் வர்த்தகம் பெரிய அளவில் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
India wants to buy anything from Russia, we are ready to discuss says Sergey Lavrov
India wants to buy anything from Russia, we are ready to discuss says Sergey Lavrovஇந்தியாவுக்கு என்ன வேண்டுமோ, நாங்க கொடுக்கிறோம் – செர்ஜி லாவ்ரோவ் உறுதி