“ஆட்சியைக் கலைக்கவேண்டும்!" – இலங்கை அரசுக்கு எதிராகக் களமிறங்கிய 11 எதிர்க்கட்சிகள்

இலங்கையில் தொடர்ந்து பொருளாதார நெருக்கடி நிலை அதிகரித்து வருகிறது. அதனால் அத்தியாவசியப் பொருள்களின் விலை விண்ணை முட்டுகிறது. மேலும் தற்போது 13 மணி நேர மின்வெட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இலங்கையில் மக்கள் அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டும் என அவரது வீட்டு முன்பாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அதிபர் ராஜபக்சேவுக்கு எதிராகப் போராட்டம்-இலங்கை

இதைத் தொடர்ந்து, அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோருக்கு எதிராக சமூக வலைதளங்களில் மக்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், இலங்கை அமைச்சரவையைக் கலைத்துவிட்டு காபந்து (தற்காலிக) அரசை அமல்படுத்த வேண்டும் என இலங்கை அமைச்சரவையில் அங்கம் வகிக்கும், ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி, தேசிய சுதந்திர கட்சி, இலங்கை கம்யூனிச கட்சி, தேசிய காங்கிரஸ், மற்றும் ஶ்ரீலங்கா மகாஜன கட்சி உள்ளிட்ட 11 கூட்டணிக் கட்சிகள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவிடம் வலியுறுத்தியுள்ளன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.