இஸ்லாமாபாத் பாதுகாப்பு உரையாடலில் பேசிய இம்ரான் கான், நாட்டிற்கு ஒரு சுதந்திரமான வெளியுறவுக் கொள்கை முக்கியமானது என்று வலியுறுத்தினார். மேலும், பாகிஸ்தானால் அதன் உச்சக்கட்டத் திறனைத் தொட முடியாததற்குக் காரணம் மற்ற சக்தி வாய்ந்த நாடுகளைச் சார்ந்திருக்கும் குறைபாடுதான் காரணம் என்று கூறினார்.
தனக்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு முன்னதாக, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், சமீபத்தில் அதிபர் விளாடிமிர் புதினை சந்திக்க ரஷ்யாவிற்கு சென்றதால், இந்தியாவை ஆதரிக்கும் ஒரு சக்திவாய்ந்த நாடு பாகிஸ்தான் மீது கோபமாக உள்ளது என்று கூறினார்.
இஸ்லாமாபாத் பாதுகாப்பு உரையாடலில் பேசிய இம்ரான் கான், நாட்டிற்கு ஒரு சுதந்திரமான வெளியுறவுக் கொள்கை முக்கியமானது என்று வலியுறுத்தினார். மேலும், பாகிஸ்தானால் அதன் உச்சக்கட்டத் திறனைத் தொட முடியாததற்குக் காரணம் மற்ற சக்தி வாய்ந்த நாடுகளைச் சார்ந்திருக்கும் குறைபாடுதான் காரணம் என்று கூறினார்.
“சுதந்திரமான வெளியுறவுக் கொள்கை இல்லாத ஒரு அரசு அதன் மக்களின் நலன்களைப் பாதுகாக்க முடியாது” என்று அவர் கூறினார்.
வெளிநாட்டு உதவிக்கு ஈடாக மற்ற நாடுகளின் விருப்பத்திற்கு அடிபணிவதைவிட ஒரு நாட்டின் நலன்களை உயர்வாக வைத்துக்கொண்டு சுதந்திரமான முடிவுகளை எடுப்பது மிகவும் முக்கியமானது என்று இம்ரான் கான் கூறினார்.
இம்ரான் கான் அமெரிக்காவைப் பற்றிக் குறிப்பிடுகையில், ஒரு சக்திவாய்ந்த நாடு தனது சமீபத்திய ரஷ்யா பயணத்தின் மீது அதிருப்தி தெரிவித்ததாக கூறினார் என்று ஏபிபி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
“மறுபுறம், ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் அதன் நட்பு நாடான இந்தியாவை ஆதரிக்கிறது” என்று அவர் கூறினார்.
இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் அரசாங்கத்திற்கு எதிராக ஒரு அச்சுறுத்தல் கடிதம் மற்றும் வெளிநாட்டு நிதியுதவி சதி தொடர்பாக இஸ்லாமாபாத்தில் செயல்படும் அமெரிக்க தூதரை வெளியுறவு அமைச்சகத்திற்கு பாகிஸ்தான் அழைத்த ஒரு நாள் கழித்து இம்ரான் கானின் இந்த கருத்துக்கள் வந்துள்ளன.
இம்ரான் கான் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்தின்போது, தேசிய பாதுகாப்பு குறித்த நாட்டின் உயர்மட்ட முடிவெடுக்கும் அமைப்பு இந்த விவகாரம் குறித்து கவலை தெரிவித்த சில மணிநேரங்களுக்குப் பிறகு அமெரிக்க தூதர் அழைக்கப்பட்டார்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பிப்ரவரி 24-ம் தேதி கிரெம்ளினில் அதிபர் புதினை சந்தித்தார். அன்றைக்கு ரஷ்ய அதிபர் உக்ரைனுக்கு எதிராக சிறப்பு ராணுவ நடவடிக்கைக்கு உத்தரவிட்டார்.
ரஷ்யாவுடனான பாக்கிஸ்தானின் உறவுகள் சமீபத்திய ஆண்டுகளில் கடுமையான பனிப்போர் விரோதப் போக்கைக் கடந்துள்ளன. மேலும், பாகிஸ்தானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவுகளில் உள்ள விரும்பத்தாக விஷயங்கள் அந்நாட்டை ரஷ்யா மற்றும் சீனாவை நோக்கி மேலும் தள்ளியுள்ளது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் பதவியேற்றதில் இருந்து பிரதமர் இம்ரான் கானுக்கு வழக்கமான அழைப்பை மேற்கொள்ளவில்லை.
இம்ரான் கான் தனது உரையில், தனது அரசாங்கம் ஒரு சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையைப் பின்பற்றியதாகக் கூறினார்.
“ஒரு நாடு எப்படி சுதந்திர அரசின் விவகாரங்களில் தலையிட முடியும்” என்று அவர் கூறினார். “ஆனால் அவர்களைக் குறை கூறக்கூடாது, ஏனென்றால் நாங்கள் அவர்களுக்கு இந்த உணர்வைக் கொடுத்தது எங்கள் தவறு.” என்று கூறினார்.
கடந்த மாதம், உக்ரைனுக்கு எதிரான போரை நிறுத்துமாறு ரஷ்யாவைக் கேட்டுக்கொண்ட ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை தீர்மானத்தில் வாக்களிப்பதை பாகிஸ்தான் புறக்கணித்தது. மேலும், இந்த மோதலை பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரம் மூலம் தீர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியது.
இம்ரான் கான் தனக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம் வெளிநாட்டு சதியின் விளைவு என்று கூறி வருகிறார். ஏனெனில், அவரது சுதந்திரமான வெளியுறவுக் கொள்கை மற்றும் அவரை அதிகாரத்தில் இருந்து வெளியேற்ற வெளிநாட்டில் இருந்து நிதி அனுப்பப்பட்டது என்று கூறினார்.
பாகிஸ்தான் நாட்டில் ஆளும் கூட்டணியின் முக்கிய கூட்டணி கட்சியான முட்டாஹிதா குவாமி இயக்கம்-பாகிஸ்தான் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை முன்வைத்த எதிர்க்கட்சி வரிசையில் சேர்ந்ததை அடுத்து, 69 வயதான பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் புதன்கிழமை நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்தார். தேசிய சட்டமன்றத்தில் அவரது அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொடுவரப்ப்ட்டது. நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான முக்கிய வாக்கெடுப்பு ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
பாகிஸ்தான் தேசிய நாடளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ஷாபாஸ் ஷெரீப்பை கிண்டல் செய்து, இம்ரான் கான் கூறினார்: “பிரதமர் அலுவலகத்திற்கு வரத் தயாராகி வருபவர்கள், எனது அறிக்கைகள் அமெரிக்காவைக் கொதிப்படையச் செய்யும் என்றும், பாகிஸ்தானின் ஆதரவு இல்லாமல் வாழ முடியாது என்றும் பேட்டி கொடுக்கிறார்கள். எந்த ஒரு வெளி நாடும் பாகிஸ்தானை மதிக்காத சூழ்நிலை ஏற்பட முந்தைய அரசியல்வாதிகளின் முடிவுகள் வழிவகுத்துள்ளதாக பிரதமர் இம்ரான் கான் கூறினார்.
“அவர்கள் நமக்கு உத்தரவிடுகிறார்கள். நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிபெறவில்லை என்றால் பாகிஸ்தானுக்கு பின்விளைவுகள் ஏற்படும்” என இம்ரான் கான் கூறுகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“