புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து, கடந்த 2 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த சர்வதேச விமான சேவை கடந்த 27ம் தேதி முதல் தொடங்கியது. இதனால், இந்தியாவில் வாரத்துக்கு வெளிநாட்டு நிறுவனங்களின் 1,783 சேவைகளும், உள்நாட்டு விமான நிறுவனங்களின் 1,465 சேவைகளும் கிடைக்கின்றன. கடந்த 2020ம் ஆண்டு ஏப்ரல் முதல் 2021ம் ஆண்டு டிசம்பர் வரையிலான 2 ஆண்டு காலத்தில், ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், அலையன்ஸ் ஏர் நிறுவனங்களுக்கு ₹17,302 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. அதிகபட்சமாக, ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ₹9,373 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. மக்களவையில் நடந்த கேள்வி நேரத்தின் போது, விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா இந்த புள்ளி விவரங்களை தெரிவித்தார்.