மகாராஷ்டிரத்தில் இயற்கை எரிவாயு மீதான மதிப்புக் கூட்டு வரியை மாநில அரசு பதின்மூன்றரை விழுக்காட்டில் இருந்து மூன்று விழுக்காடாகக் குறைத்துள்ளது.
பெட்ரோல் டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில், இயற்கை எரிவாயு மீதான மதிப்புக் கூட்டுவரியை மூன்று விழுக்காடாக மகாராஷ்டிர அரசு குறைத்துள்ளது. இதனால் மும்பையில் எரிவாயு விலை கிலோவுக்கு 8 ரூபாய் குறைந்து 58 ரூபாயாக உள்ளது.
இயற்கை எரிவாயுவில் இயங்கும் ஆட்டோ, டாக்சி, கார்கள், பேருந்துகள் ஆகியவற்றுக்கான எரிபொருள் செலவு ஓரளவு குறையும் எனத் துணை முதலமைச்சர் அஜித் பவார் தெரிவித்துள்ளார். இதனால் அரசுக்கு ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.