தென் கொரியாவில் இரண்டு போர் விமானங்கள் நேருக்குநேர் மோதி விபத்துக்கு உள்ளானதில் 4 விமானிகள் உயிரிழந்தனர்.
வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 1) தென் கொரிய விமானப்படையின் இரண்டு விமானங்கள் நடுவானில் மோதியதில் நான்கு விமானிகள் கொல்லப்பட்டதாக சியோல் இராணுவம் தெரிவித்துள்ளது.
கேடி-1 பயிற்சி ஜெட் விமானங்கள் தலைநகர் சியோலில் இருந்து தெற்கே 300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சச்சியோன் நகருக்கு அருகே விபத்துக்குள்ளானதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Photo: AP
“Sacheon விமான தளத்தில் இருந்த இரண்டு KT-1 பயிற்சி ஜெட் விமானங்கள் பயிற்சியின் போது நடுவானில் மோதி விபத்துக்குள்ளானது” என்று பாதுகாப்பு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த விபத்தில் 4 விமானிகள் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விமானப்படை “சேதத்தின் சரியான சூழ்நிலையை சரிபார்த்து, விபத்துக்கான காரணத்தை விசாரிக்கும்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Photo: AP
அதனைத் தொடர்ந்து, மொத்தம் 130 துருப்புக்கள், 95 போலீஸ் அதிகாரிகள் மற்றும் 60 தீயணைப்பு வீரர்கள் மற்றும் மூன்று ஹெலிகாப்டர்கள் விபத்து நடந்த இடத்தில் தேடுதலைத் தொடங்கியுள்ளதாக உள்ளூர் அரசாங்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி Yonhap செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் உயிரிழப்புகள் எதுவும் இல்லை என்று கூறிய விமானப்படை, விபத்து மற்றும் சேதத்திற்கான காரணத்தை கண்டறிய ஒரு குழுவை அமைத்துள்ளனர், இதில் குடியிருப்போர் உட்பட பலர் உள்ளனர்.
Photo: EPA
இந்த ஆண்டு தென் கொரிய விமானப்படை ஜெட் விமானங்கள் சம்பந்தப்பட்ட பல சம்பவங்களில் இந்த விபத்தும் ஒன்றாகும்.
ஜனவரியில், F-5 போர் விமானம் விபத்தில் ஒரு விமானி கொல்லப்பட்டார். Photo: EPA
Photo: EPA