குறிப்பிட்ட ஒரு சாதியை சேர்ந்தவர்கள் மட்டுமே பணிநியமனம் செய்யப்படும் என்ற, தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் அறிவிப்பு பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.
இந்து சமய அறநிலை துறை வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
“கடலூர் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மண்டலத்தில் உள்ள சட்டப்பிரிவு 46 (3) படி, கடலூர் மாவட்டம், திருப்பாதிரிப்புலியூர் அருள்மிகு வரதராஜ பெருமாள் கோவிலுக்கு பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்கள் நியமனம் செய்வதற்கு கீழ்க்கண்ட நிபந்தனைகளின்படி, திருக்கோவில் நிர்வாகத்துக்கு உட்பட்ட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பங்கள் உரிய படிவத்தில் பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ 30.04.2022 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
நிபந்தனைகள் :
1) கடலூர் வட்டம், திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் வசிக்கும் பலிஜா நாயுடு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே, பரம்பரை முறைவழி சாராய அறங்காவலுருக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
2) கடலூர் வட்டம், திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் வசிக்கும் நாயுடு சமூகத்தைச் சேர்ந்தவர்கள், உறுப்பினர்களாக கொண்ட திருப்பாதிரிப்புலியூர் நாயுடு சங்கம் தேர்ந்தெடுத்து கொடுக்கும் நபர்களை மட்டுமே அறங்காவலர்களாக நியமனம் செய்ய முடியும்” என்று அந்த அறிவிப்பில் இந்து சமய அறநிலை துறை தெரிவித்துள்ளது.
இந்த சம இந்து சமய அறநிலையத்துறையின் இந்த பத்திரிக்கை செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
ஒரு பதவிக்கு, குறிப்பிட்ட ஒரு சாதியை சேர்ந்தவர்கள் மட்டும் தான் விண்ணப்பிக்க முடியும் என்ற அறிவிப்பு அதிர்ச்சி அளிப்பதாக பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.