பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதன் காரணமாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது.
முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான அண்ணாமலை ஆளும் திமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். முதல்வரின் துபாய் பயணத்தையும் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார் அண்ணாமலை.
முன்னதாக, தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
தமிழக அரசு அவருக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கி வந்தது. ஆனால், கடந்த சில மாதங்களுக்கு முன்பு எக்ஸ் பிரிவு பாதுகாப்பாக அது மாற்றப்பட்டது. இதற்கு அண்ணாமலை ஆட்சேபம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அவருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக உளவு அமைப்புகள் உள்துறை அமைச்சகத்தின் அறிக்கை சமர்ப்பித்திருந்தது.
அதைத் தொடர்ந்து 11 பேர் கொண்ட துணை ராணுவப் படையினர் அண்ணாமலைக்கு பாதுகாப்பு வழங்குவர் என்று மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.
இதையும் படியுங்கள்: ‘வயது 83… கொடி பிடித்து முழங்கி போராட்டத்தை முன்னெடுப்பேன்’: டாக்டர் ராமதாஸ்
அதன்படி, அவருக்கு 24 மணி நேரமும் ஆயுதம் ஏந்திய துணை ராணுவப் படை மற்றும் மாநில போலீஸார் பாதுகாப்பு வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“