பாரிஸ்:
உக்ரைன் மீது ரஷியா 38-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. பல்வேறு பகுதிகளை கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ள ரஷியா, இப்போது உக்ரைன் தலைநகர் கீவை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.
ரஷியாவின் வான் தாக்குதல் காரணமாக உக்ரைன் நகரங்களில் உட்கட்டமைப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. உக்ரைன் படைகளும் சளைக்காமல் ரஷியாவுக்கு பதிலடி கொடுத்தவண்ணம் உள்ளனர்.
இதற்கிடையே, பெலாரஸ் மற்றும் துருக்கியில் இரு நாட்டு அதிகாரிகளுக்கு இடையில் போர் நிறுத்தம் தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இந்நிலையில், ரஷியா நடத்திய தாக்குதலால் 50க்கும் மேற்பட்ட உக்ரைனின் நினைவுச் சின்னங்கள் சேதமடைந்தன. தேவாலயங்கள், வரலாற்றுக் கட்டிடங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் உட்பட பல்வேறு கலாச்சார சின்னங்கள் போரினால் சேதமடைந்துள்ளன என யுனெஸ்கோ தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்…கனடா பள்ளிகளில் நடந்த அநியாயத்துக்காக மன்னிப்பு கேட்ட போப் பிரான்சிஸ்