மொபைல் போன்களில்
ஆபாசப் படம்
பார்ப்பதால்தான் பாலியல் வன்புணர்வுச் சம்பவங்கள் பெருகி விட்டதாக
குஜராத்
அமைச்சர்
ஹர்ஷ் சங்கவி
கூறியுள்ளார்.
இது மட்டுமல்லாமல் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள்தான் அதிக அளவில் பாலியல் வன்புணர்வுகளில் சிறுமிகளிடம் ஈடுபடுகிறார்கள் என்றும் இந்த சங்கவி கூறியுள்ளார்.
பாஜகவைச் சேர்ந்த அமைச்சர் ஹர்ஷ் சங்கவி கூறியுள்ள இந்தக் கருத்துக்கள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹர்ஷ் இந்த விவகாரம் குறித்துக் கூறுகையில், இந்தியாவில் பாலியல் வன்புணர்வுகள் அதிகரிக்க, மொபைல் போன்களில் ஆபாசப் படங்கள் பெருமளவில் காணக் கிடைப்பதே. இதுதவிர குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், சிறுமிகளிடம் அத்துமீறும் சம்பவங்களும் அதிகம் நடைபெறுகின்றது.
இதுதொடர்பாக சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த இரண்டு காரணங்கள்தான் பாலியல் வன்புணர்வுகள் அதிகம் நடக்க முக்கியக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாம் பாலியல் பலாத்கார சம்பவங்களுக்கு எப்போதுமே போலீஸாரைக் குறை கூறி வருகிறோம். ஆனால் சமூகத்தின் படிந்துள்ள கரும்புள்ளி இது. ஆனால் போலீஸாரை மட்டும் இதில் நாம் குறை கூற முடியாது. நாட்டிலேயே மிகவும் பாதுகாப்பான மாநிலம் குஜராத்தான். ஒரு தந்தை மகளை
பாலியல் வன்புணர்வு
செய்யும்போது அது மிகப் பெரிய சமூக பிரச்சினையாக மாறுகிறது. இப்படிப்பட்ட புத்தி உள்ள தந்தை மொபைல் போன் வழியாகவே கெடுகிறார் என்றும் ஹர்ஷ் சங்கவி கூறியுள்ளார்.
அடுத்த செய்திடெல்லி.. பஞ்சாப்.. அடுத்த பர்னிச்சர் “குஜராத்”.. களத்தில் குதிக்கும் கெஜ்ரிவால், பகவந்த் மான்!