மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழகத்தில் சொத்து வரி உயர்வு மிகமிகக் குறைவாகவே உள்ளதாக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பிப்ரவரிக்குள் வரியை உயர்த்தாவிட்டால், உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதி ஒதுக்கீடு கிடையாது என மத்திய அரசு தெரிவித்ததன் காரணமாகவே சொத்து வரி உயர்த்தப்பட்டதாக அவர் கூறினார்.
சென்னையில் 24 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதுதான் வரி உயர்த்தப்பட்டுள்ளதாகவும், ஏழை, நடுத்தர மக்கள் பாதிக்கப்படாத வகையில் வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.