அர்ஜுன் கபூர் – மலைக்கா அரோரா இருவருக்கு இடையிலான வயது வித்தியாசம் 12 வருடங்கள். 2019-ல் அவர்கள் இருவரும் ரிலேசன்ஷிப்பில் இருப்பதாக அறிவித்தனர். அது முதலே அவர்களின் வயது வித்தியாசம் குறித்து ஒரு சாரர் விமர்சனம் செய்து வருகின்றனர். தற்போது அதைப் பற்றி மனம் திறந்து பேசியிருக்கிறார் அர்ஜுன் கபூர்.
“இந்திய மக்கள் வதந்திகளை விரும்புகிறார்கள், மற்றவர்களுடைய உறவைப் பற்றி பேசும் போது எல்லோரும் ‘ஜனனிகளாக’ (இந்தியில் வயதான தாயைக் குறிக்கும் சொல்) மாறிவிடுகிறோம்” என்று தெரிவித்து இருக்கிறார்.
அர்ஜுன் இந்தித் தொலைக்காட்சிக்கு அளித்திருக்கும் பேட்டி ஒன்றில், “மக்கள் எல்லாவற்றின் மீதும் ஒரு கருத்து வைத்திருக்கிறார்கள். அவர்களுக்குக் கருத்து சொல்வது பிடிக்கும். மற்றவர்களின் உறவைப் பற்றி பேசும்போது ‘எப்போது கல்யாணம் ஆகும்? இது நீடிக்கும் என நினைக்கிறாயா? அவனிடம் அவள் எதைப் பார்த்திருப்பாள்? அவன் பார்க்க எப்படி இருக்கிறான்? கரியர் நிச்சயம் வீழ்ந்துவிடும்’ என்பது போல, பேச வேண்டும் என்பதற்காகப் பேசுபவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் உங்களைப் பற்றி நினைப்பதை மாற்றிக்கொள்ள, ஏதோவொரு நாள் அல்லது உங்களைப் பற்றி நீங்கள் விளக்கிச் சொல்லும் ஒரு பேட்டி போதும்.”
2019-ல் மலைகா அரோராவும் அர்ஜுன் கபூரும் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதை அறிவித்தனர். அது முதல் அவர்கள் கல்யாணம் பற்றி வதந்திகள் பரவி வருகின்றன. “சொந்த வாழ்க்கையைப் பொறுத்தவரை, மற்றவர்களின் யூகங்களைக் கேட்கும் போது எந்தவித உணர்ச்சியுமின்றி உங்களுடைய உறவை, உணர்ச்சிகளைப் பற்றி தோன்றுவதையெல்லாம் எழுதுவது வெறும் அற்பமான பொழுதுபோக்கு என்று உங்களுக்குத் தோன்ற ஆரம்பித்துவிடும்” எனத் தன்னுடைய வருத்தத்தைப் பகிர்ந்துள்ளார் அர்ஜுன் கபூர்.
அர்ஜுன் கபூர், ஜான் ஆபிரஹாம் உடன் நடித்திருக்கும் ‘Ek Villain 2’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. மலைக்கா டிவி நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று வருகிறார்.