பயிர் கொள்முதல் செய்த 72 மணி நேரத்தில் பணம்| Dinamalar

லக்னோ: “பயிர் கொள்முதல் செய்த 72 மணி நேரத்திற்குள் விவசாயிகளுக்கு அதற்குரிய பணத்தை வழங்க வேண்டும்,” என, உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, இந்த ஆண்டுக்கான பயிர் கொள்முதல் நேற்று துவங்கியது. இதுகுறித்த உயர் நிலை ஆலோசனைக் கூட்டம், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் லக்னோவில் நேற்று நடந்தது.

இக்கூட்டத்தில் பேசிய முதல்வர் யோகி, “மத்திய அரசு நிர்ணயித்துள்ளபடி, ஒரு குவிண்டால் கோதுமை 2,015 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட வேண்டும். பயிர் கொள்முதல் செய்த 72 மணி நேரத்தில் அதற்குரிய பணத்தை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும்,”என, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். உ.பி.,யில் தற்போது ஒரு லட்சத்து 48 ஆயிரத்து, 383 விவசாயிகள், அரசு கொள்முதல் நிலையங்களில் பதிவு செய்துள்ளனர். மாநிலம் முழுதும் 4,593 கொள்முதல் நிலையங்கள் உள்ளன.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.