மதுரை ஆவின் நிறுவனத்திலிருந்து பால் பாக்கெட்டுகள் கடத்தல் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில் கடத்தலில் ஈடுபட்ட ஒப்பந்ததாரரின் உரிமம் ரத்து செய்யப்பட்டது.
சாத்தமங்கலம் பகுதியில் உள்ள ஆவின் பால் பண்ணையில் இருந்து பால் பாக்கெட்டுகள், ஒப்பந்த வாகனங்கள் மூலம் அந்தந்த பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
கடந்த 27ம் தேதி அதிகாலை 5.30 மணியளவில் அதாவது ஷிப்ட் முடியும் நேரத்தில் ஒரு ஒப்பந்ததாரர் டிரேக்களில் பால் பாக்கெட்டுகளை வைத்து வாகனத்தில் ஏற்றிச் செல்வது போன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகின.
அவர் முறைகேடாக பால் பாக்கெட்டுகளை கடத்துவதாக எழுந்த புகாரை அடுத்து, சம்பந்தப்பட்ட அந்த ஒப்பந்ததாரர் கணேசனை பிடித்து அதிகாரிகள் விசாரித்த அப்போது அவர் அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
விசாரணையில், பல மாதங்களாக கணேசன் கணக்கில் காட்டாமல் பால் பாக்கெட்டுகளை எடுத்துச் சென்றது தெரியவந்ததை அடுத்து, அவரது உரிமம் ரத்து செய்யப்பட்டது.