வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஜெனீவா: ஒமைக்ரான் வைரஸின் பிஏ 1, பிஏ 2 ஆகியவற்றை அடுத்து எக்ஸ்இ ரகம் தற்போது உலகை அச்சுறுத்த இருப்பதாக உலக சுகாதார அமைப்பு விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
சீனாவின் வடகிழக்கு மாகாணம் மற்றும் ஷாங்காய் ஆகிய பகுதிகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பிஏ 2 ரக ஒமைக்ரான் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல அமெரிக்காவிலும் சில பகுதிகளிலும் இந்த உலகம் அதிவேகமாக பரவி வருகிறது. பிரிட்டனில் 49 லட்சம் பேருக்கு இதன் தாக்கம் இருந்தது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் தற்போது பிரிட்டனில் எக்ஸிஇ எனப்படும் புதிய ரக வைரஸ் பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பு தகவல் அளித்துள்ளது. எக்ஸிஇ, பிஏ 1 மற்றும் பிஏ 2 ஆகிய ரகங்களின் கலவை என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.பிரிட்டன் மருத்துவ இதழில் இந்த ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. பிஏ 2 ரகத்தை காட்டிலும் எக்ஸ்இ பத்து மடங்கு அதிவேகமாக பரவும் அபாயம் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஜனவரி 19ஆம் தேதி இந்த ரகம் கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போது பெரும்பாலான நாடுகளில் உலக குடிமக்கள் பலர் 2 டோஸ் தடுப்பு மருந்து செலுத்திக் கொண்டுவிட்ட நிலையில் இதுகுறித்து யாரும் அச்சப்படாமல் சமூக விலகளைப் பின்பற்றி தங்கள் பணிகளை தொடரலாம் என விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Advertisement