புனித ரமழான் மாதம் ஆரம்பமாகியுள்ளது.
ஹிஜ்ரி 1443 புனித ரமழான் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் பிறைக்குழு மாநாடு இன்று (02) மாலை மஹ்ரிப் தொழுகையை தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெற்றது.
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்டமை ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டது. இதனை அடுத்து ரமழான் மாதம் ஆரம்பமாவதாக பிறைக்குழு மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது. கொவிட் சுகாதார வழிமுறைகள் மற்றும் ஊரடங்குச்சட்டம் என்பவற்றைக் கருத்திற்கொண்டு மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலானோர்களின் பங்கேற்பில் இந்த மாநாடு இடம்பெற்றது.
கொழும்பு பெரிய பள்ளிவாசல், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, முஸ்லிம் சமய கலாசார பண்பாட்டலுவல்கள் திணைக்கள பிரதிநிதிகள்; இதில் பங்கேற்றனர்.