ரஷ்யா மீது விதிக்கப்பட்டுள்ள அனைத்து தடைகளையும் மேற்கத்திய நாடுகள் திரும்ப பெறாவிட்டால் சர்வதேச விண்வெளி நிலையத்துடனான ஒத்துழைப்பை ரஷ்யா திரும்ப பெரும் என தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா நடத்திவரும் போர் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கத்திய நாடுகள் இதுவரை 5 கட்டங்களாக பல்வேறு பொருளாதார தடைகளை ரஷ்யா மீது விதித்துள்ளது.
இந்தநிலையில் சர்வதேச விண்வெளி நிலையத்தின் கூட்டமைப்பு நாடுகளுடன் ரஷ்யாவின் ஒத்துழைப்பை மறுசீரமைப்பு செய்து உறவை தொடர்வதற்கும், வருங்காலங்களில் இணைந்து மேற்கொள்ள படவேண்டி இருந்த விண்வெளி ஆராய்ச்சிகளுக்கும் ரஷ்யா மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைகளை முழுமையாக விலகி கொண்டால் மட்டுமே சாத்தியமாகவும் என சனிக்கிழமை அந்த நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
Дмитрий Рогозин: «Вина за развал сотрудничества в области космоса лежит на плечах США, Великобритании, Франции и Германии»
Эти страны уничтожили то, что создавалось человечеством с таким трудом, что создавалось кровью и потом тех людей, которые осваивали космос. pic.twitter.com/cV8TijLw8q
— РОСКОСМОС (@roscosmos) March 4, 2022
இதுகுறித்து, ரஷ்யாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான Roscosmos தலைவர் டிமிட்ரி ரோகோசின் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், இந்த பொருளாதார தடைகள் ரஷ்யாவின் பொருளாதாரத்தை அழித்து மக்களை விரக்தி மற்றும் பட்டினியில் தள்ளும் முயற்சியாகும், இதன் மூலம் ரஷ்யாவை மண்டியிட வைக்க மேற்கத்திய நாடுகள் முயல்வதாகவும், ஆனால் அவர்கள் இதில் வெற்றியடைய போவது இல்லை என தெரிவைத்துள்ளார், இருப்பினும் இதுவே அவர்களது உள்நோக்கம் எனவும் தெரிவித்துள்ளார்.
எனவே தான் சர்வேதேச விண்வெளி நிலையத்தின் கூட்டமைப்பு நாடுகளுடனும் உறவை தொடர்வது, மற்றும் வரும்கால விண்வெளி ஆராய்ச்சிகளுக்கும் ரஷ்யாவின் ஒத்துழைப்பை தருவது போன்றவற்றிக்கு பொருளாதார தடைகளை விலகினால் மட்டுமே சாத்தியம் என தாம் நம்புவதாக தெரிவித்துள்ளார்.
இல்லையேல் சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள கனடா, அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஜப்பான் போன்ற விண்வெளி நிறுவனங்களுடன் எப்போது ஒத்துழைப்பை நிறுத்துவது என்ற அறிவிப்பை ரஷ்ய அதிகாரிகளுக்கு விரைவில் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைகள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவின் உறவை அழிக்கும் என முன்னரே டிமிட்ரி ரோகோசின் எச்சரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
அதிகரிக்கும் இறப்பு எண்ணிக்கை: மைகோலைவ் நகரில் நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதல்!