புதுடில்லி:’மருத்துவ பட்டம் பெறும் மாணவர்கள், ‘ஹிப்போக்ரேட்ஸ்’ உறுதி மொழியை ஏற்பதற்கு பதில், ‘மகரிஷி சரகா’ உறுதிமொழியை ஏற்க வேண்டும்’ என, தேசிய மருத்துவ ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
கிரேக்க நாட்டில் வாழ்ந்த ஹிப்போக்ரேட்ஸ், மருத்துவத்தின் தந்தை எனப் போற்றப்படுகிறார். இவர், மருத்துவர்களுக்கான ஒழுக்க நெறிமுறைகளையும் ஏற்படுத்தினார்.இவரின் மருத்துவக் கோட்பாடுகளை கடைப்பிடிக்கும் விதமாக, இந்தியாவில் எம்.பி.பி.எஸ்., பட்டம் பெறுவதற்கு முன், மாணவர்கள் ஹிப்போக்ரேட்ஸ் உறுதிமொழியை ஏற்பது வழக்கமாக உள்ளது.
இதை மாற்ற, தேசிய மருத்துவ ஆணையம் பரிந்துரைத்துள்ளது. ஆயுர்வேத மருத்துவத்தின் தந்தையாக போற்றப்படும் மகரிஷி சரகா, ‘சரக சம்ஹிதை’ நுாலில் கூறியுள்ள மருத்துவர்களுக்கான கோட்பாடுகளை படித்து, மாணவர்கள் உறுதிமொழி ஏற்க பரிந்துரைத்து உள்ளது. மேலும், ஆண்டுதோறும் ஜூன் ௧௨ முதல், சர்வதேச யோகா தினமான ஜூன் ௨௧ வரை, மருத்துவ மாணவர்களுக்கு தினமும் ஒரு மணி நேரம் யோகா பயிற்சியளிக்க வேண்டும் எனவும் தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்து உள்ளது.
Advertisement