லண்டன்:
சீனாவின் உகான் நகரில் இருந்து கடந்த 2019ம் ஆண்டு கடைசியில் பரவிய கொரோனா வைரஸ் உலக அளவில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியது.
இதை தொடர்ந்து கொரோனா உருமாற்றம் அடைந்த நிலையில் டெல்டா மற்றும் ஒமைரான் வைரஸாக பரவியது. இந்நிலையில், தற்போது இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா கண்டறியப்பட்டுள்ளதாக பிரிட்டன் சுகாதார பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
உருமாற்றம் அடைந்துள்ள ஒமைக்ரான் வைரஸாக இது கருதப்படுவதாகவும், புதிய வகை இந்த கொரோனா வைரஸ் எக்ஸ்இ (XE) என்று அழைக்கப்படுகிறது என பிரிட்டன் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒமைக்ரானை விட இது வேகமாக பரவும் தன்மை கொண்டது என எச்சரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் 19ந் தேதி எக்ஸ்இ வகை கொரோனா முதன் முதலாக இங்கிலாந்தில் கண்டறியப்பட்டதாக பிரிட்டன் சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
மார்ச் 2 ந் தேதிவரை இங்கிலாந்தில் 637 பேர் எக்ஸ்இ வகை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரிட்டன் சுகாதார பாதுகாப்பு நிறுவன தகவகல்கள் தெரிவித்துள்ளன.