ராஜ்கோட்-குஜராத்தில், 1 கிலோ எலுமிச்சம் பழம், 200 ரூபாய்க்கு விற்கப்படுவதால், மக்கள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.குஜராத்தில், முதல்வர் பூபேந்திர படேல் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது.
இங்குள்ள ராஜ்கோட் மாவட்டத்தில், அதிக தேவை இருப்பதாலும், வரத்து குறைந்துள்ளதாலும், எலுமிச்சம் பழங்களின் விலை அதிகரித்துஉள்ளது.ஒரு கிலோ எலுமிச்சம் பழம், 200 ரூபாய்க்கு விற்கப்படுவதால், நுகர்வோர் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இது குறித்து, ஹிமான்ஷு என்ற நுகர்வோர் கூறியதாவது:பெரும்பாலான காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளன. எனினும், எலுமிச்சம் பழங்களைப் போல், எதன் விலையும் இவ்வளவு உயரவில்லை. மேலும், 50 – 60 ரூபாய்க்கு விற்கப்பட்ட 1 கிலோ எலுமிச்சம் பழங்கள், இப்போது, 200 ரூபாய்க்கு விற்கப்படுகின்றன.
இதனால் நடுத்தர மக்களுக்கு தான் பிரச்னை.இவ்வாறு அவர் கூறினார்.வெயில் வாட்டி வதைப்பதால், மக்கள் எலுமிச்சம் பழரசம் அதிகம் அருந்துகின்றனர். இந்நிலையில், அதன் விலை உயர்வு, மக்களை பெரிதும் பாதித்துள்ளது.
ராஜ்கோட்-குஜராத்தில், 1 கிலோ எலுமிச்சம் பழம், 200 ரூபாய்க்கு விற்கப்படுவதால், மக்கள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.குஜராத்தில், முதல்வர் பூபேந்திர படேல் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது.
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.