பெங்களூரு : பெங்களூரில் ஓய்வு பெற்ற ஆங்கில பேராசிரியர் ஒருவர், ஆட்டோ ஓட்டி வருகிறார்.பெங்களூரு காடுகோடியை சேர்ந்தவர் பட்டாபிராமன், 74. மும்பையில் உள்ள கல்லுாரியில் ஆங்கில பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஓய்வுக்கு பின் பெங்களூரு வந்து, ஆட்டோ ஓட்டி வருகிறார்.தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் நிகிதா என்பவர், இவரது ஆட்டோவில் பயணிக்கும் போது அவரது ஆங்கில புலமையை பார்த்து வியந்துள்ளார்.
அதன்பின் அவரது கதையை கேட்டு, அந்த தகவல்களை தன் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.ஆட்டோ ஓட்டுவது குறித்து பட்டாபி ராமன் கூறுகையில், ”எனக்கு பெங்களூரில் எந்த வேலையும் கிடைக்கவில்லை. சென்ற இடத்தில் எல்லாம் ஜாதி குறித்து கேட்டனர். இதனால் மும்பை சென்று கல்லுாரியில் 20 ஆண்டாக பேராசிரியராக பணியாற்றினேன்.ஓய்வுக்கு பின் மீண்டும் பெங்களூரு வந்தேன்.
நான் பணியாற்றியது தனியார் கல்லுாரி என்பதால் ஓய்வூதியமும் இல்லை. இதனால் 14 ஆண்டாக ஆட்டோ ஓட்டி வருகிறேன். தினமும் 700 ரூபாய் முதல் 1,000 ரூபாய் வரை கிடைக்கிறது.இது எனக்கும், என் பெண் நண்பருக்கும் போதுமானது. என் மனைவியை, நான் இப்போதும் ஒரு தோழியை போலத்தான் பார்க்கிறேன். அவரை ‘கேர்ள் பிரண்ட்’ என்று தான் அழைப்பேன்.இவ்வாறு அவர் கூறி உள்ளார்.இவரது புகைப்படம் ஊடகங்களில் வெளிவந்ததை தொடர்ந்து பிரபலமாகி உள்ளார்.
Advertisement