உக்ரைன் தலைநகர் கீவ் அருகே நிர்வாண நிலையில் இருந்த 5 பெண்களின் உடல்களை எரிக்க ரஷ்ய படைகள் முயன்றுள்ளது.
இந்த பதறவைக்கும் தகவலை உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
உக்ரைன் தலைநகர் கீவ்
உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் 39-வது நாளாக தொடர்கிறது.
உக்ரைன் தலைநகர் கீவ் அருகிலுள்ள சில முக்கிய நகரங்களில் இருந்து ரஷ்யப் படைகள் பின்வாங்கியதைத் தொடர்ந்து கீவ் பிராந்தியத்தின் கட்டுப்பாட்டை மீண்டும் முழுமையாக கைப்பற்றி உள்ளோம் என துணை பாதுகாப்பு மந்திரி கன்னா மாலியர் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், ரஷ்யப் படைகள் கீவ் அருகே சாலை ஓரத்தில் நான்கு அல்லது ஐந்து நிர்வாண பெண்களின் உடல்களை எரிக்க முயன்றன என கூறியுள்ளார்.
சிதறி கிடந்த உடல்கள்
இதோடு கீவ்விற்கு அருகே மக்கள் அதிகம் வசிக்கும் முக்கிய நகரமான புச்சாவில் ரஷ்ய படையினரால் நூற்றுகணக்கான அப்பாவி பொதுமக்கள் சுட்டு கொள்ளப்பட்டு நகரத்தின் தெருக்கள் எங்கும் சிதறி கிடந்துள்ளன.
ரஷ்யாவிடமிருந்து நகரத்தை மீண்டும் கைப்பற்றிய பின்னர் புச்சாவில் 280 பேரை வெகுஜன புதைகுழிகளில் உக்ரைன் வீரர்கள் புதைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.