கிரிப்டோ கரன்சி தொடர்பான குற்றங்களில் விசாரணைக்கு உதவும் வகையில் புதிய வழிகாட்டுதல்களை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
காவல்துறை ,சிபிஐ போன்ற புலனாய்வு நிறுவனங்கள் தங்கள் சொந்த கிரிப்டோ வாலட் பராமரிக்க வேண்டும். அதில் இணைய வழியில் பறிமுதல் செய்த சொத்துகளை சேமிக்க வேண்டும், குற்றத்தின் முழு பின்னணியை ஆவணப்படுத்த வேண்டும் என்பது போன்ற அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
சைபர் குற்றங்கள் குறிப்பாக கிரிப்டோ கரன்சி தொடர்பான குற்றங்கள் அதிகரிக்கும் சூழலில் கிரிப்டோ வாலட் மூலம் சேகரிக்கப்படும் ஆவணங்கள் நீதிமன்றத்தில் முக்கிய ஆதாரமாகப் பயன்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை கிரிப்டோ கரன்சி தொடர்பான குற்றங்களைக் கையாள்வது குறித்து எந்த வித வழிகாட்டலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.