கலர்ஸ் தமிழின் ஆர் யு ரெடி கேம் ஷோ குதூகல கொண்டாட்டதுடன் ஆரம்பம்….!

தமிழ்நாட்டில் வளர்ந்து வரும் பொழுதுபோக்குச் சேனலான
கலர்ஸ் தமிழ்
, தென்னிந்தியாவில் கேம் ஷோவை புதிய உச்சத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் போட்டிக்குப் போட்டி
R U Ready
?? என்ற புத்தம் புதிய கேம் ஷோவின் மிகச்சிறப்பான தொடக்க ஒளிபரப்பிற்கு தயாராக இருக்கிறது.

பொழுதுபோக்கும், குதூகலமும் நிறைந்த இந்த கேம் ஷோ, 2022 ஏப்ரல் 3 இரவு 7 மணிக்கு கலர்ஸ் தமிழில் முதன் முறையாக ஒளிபரப்பாகிறது. அதன்பிறகு, ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிறு தினங்களில், இரவு 8.00 மணிக்கு இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்.தைரியசாலிகளுக்கே அதிர்ஷ்ட தேவதையின் அருள் கிடைக்கும் என்ற பொன்மொழியையொட்டி கலர்ஸ் தமிழின் பிரபல நட்சத்திரங்கள், ஒருவர் மற்றொருவருக்கு எதிராக பல்வேறு சவால்கள் கொண்ட இப்போட்டியில் களமிறங்குகின்றனர். இந்நிகழ்ச்சி, ஒரு லீக் வடிவ போட்டியாக நடத்தப்படுகிறது.

‘மணி ஹெய்ஸ்ட்’ பட்டி டிக்கரிங்கா..?: ‘பீஸ்ட்’ பட டிரெய்லரை வச்சு செய்யும் நெட்டிசன்கள்..!

தொகுப்பாளியான
பாவனா
பாலகிருஷ்ணன் இந்நிகழ்ச்சியை சுவைபட தொகுத்து வழங்குகிறார். கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான மற்றொரு பிரபல நிகழ்ச்சியான டான்ஸ் Vs டான்ஸ் சீசன் 2 -ன் தொகுப்பாளராக பங்கேற்ற பாவனா. கலர்ஸ் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். இப்போட்டியில் பிரபல நடன இயக்குனரான
பாபா பாஸ்கர்
, சூப்பர் ஆடியன்ஸ் பொறுப்பில் செயல்படுவார். போட்டியில் எந்த குழு வெற்றி பெறுகிறது என்று தீர்மானிக்க பார்வையாளர்களின் வாக்குகளோடு இவரது வாக்கும் சேர்த்து கணக்கிடப்படும்.

இச்சேனலின் பிரபல நிகழ்ச்சிகளில் நடிக்கும்
குஷ்பூ சுந்தர்
, ரேஷ்மா முரளிதரன், மதன், தர்ஷினி, லாஸ்லியா, நவீன், ஹேமா பிந்து போன்ற நடிக, நடிகைகள், இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு டாஸ்குகளை வெற்றிகரமாக செய்து முடிக்க, போட்டியில் மோதுகின்ற கருத்தாக்கத்தின் அடிப்படையில் இந்நிகழ்ச்சி உருவாக்கப்பட்டுள்ளது. குழு A -வில் சில்லுனு ஒரு காதல், அபி டெய்லர், வள்ளி திருமணம் மற்றும்
இதயத்தை திருடாதே
நெடுந்தொடர்களின் நட்சத்திரங்கள் மற்றும் குழு B -இல் இது சொல்ல மறந்த கதை,
அம்மன் 3
, நம்ம மதுரை சிஸ்டர்ஸ் மற்றும் மீரா ஆகிய நெடுந்தொடர்களின் நட்சத்திரங்கள் இடம்பெறுகின்றனர்.

சுழல்கின்ற ஒரு இயந்திரத்தின் லீவரை குழுக்கள் இப்போட்டியில் இழுக்கவேண்டும் அப்போது ஒரு சுழற்சியில் முடிவில் செய்யப்பட வேண்டிய ஒரு டாஸ்க் தெரியவரும். அதன்பிறகு அந்த டாஸ்க் கட்டளையை அக்குழுவின் போட்டியாளர்கள் செயல்படுத்த வேண்டும். நடனம், பாடல், புதிர்களுக்கு பதிலளிப்பது அல்லது பிற வேடிக்கையான செயல்பாடுகள் இதில் இடம்பெறுவது சுவாரஸ்யத்தையும், பரபரப்பையும் இன்னும் அதிகமாக்கும்.

ஒவ்வொரு குழுவும் அதற்கு வழங்கப்பட்ட டாஸ்குகளின் தொகுப்பை செய்து முடிக்கும்போது கேம் முடிவுக்கு வரும். மிக அதிக மதிப்பெண்கள் எடுத்த குழு, இந்நிகழ்ச்சியின் முடிவில் வெற்றியாளராக அறிவிக்கப்படும். இப்போட்டித் தொடரின் ஒவ்வொரு எபிசோடும் பாசத்தையும், ஒற்றுமையுணர்வையும் கொண்டாடுவதாக அமையும். கிண்டல், கேலியுடன் நகைச்சுவை துணுக்குகளும் இந்நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்கள் மட்டுமின்றி பார்வையாளர்களையும் பரவசப்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

பிரபல நடன இயக்குனரான பாபா பாஸ்கர் இதுபற்றி பேசுகையில், “இந்நிகழ்ச்சியின் ஒரு அங்கமாக இடம்பெறுவது எனக்கு அளவற்ற ஆனந்தத்தை தருகிறது. முதன்முறையாக கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியுடன் இணைவது இன்னும் கூடுதல் உற்சாகத்தை வழங்குகிறது. கேளிக்கையையும், பொழுதுபோக்கையும் ரசித்து விரும்புபவராக நான் எப்போதும் இருந்து வருகிறேன். போட்டிக்குப் போட்டி நிகழ்ச்சியிலும் அதே உணர்வை நான் தொடர்ந்து வெளிப்படுத்துவேன். இதில் பங்கேற்கவுள்ள அனைத்து கலைஞர்களுமே அபாரமான திறமைசாலிகள்.

இனி வரவிருக்கும் எபிசோடுகளில் இந்த கேம் எப்படி முன்னேற்றம் காண்கிறது என்று பார்க்க உங்களைப்போலவே நானும் ஆவலோடு எதிர்நோக்கி காத்திருக்கிறேன்,” என்று கூறினார். இன்று இரவு 7.00 மணிக்கு முதன்முறையாக ஒளிபரப்பைத் தொடங்கும் போட்டிக்குப்போட்டி ஆர் யூ ரெடி?? நிகழ்ச்சியின் மாபெரும் தொடக்க நிகழ்வை கண்டு ரசிக்க கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை டியூன் செய்ய மறவாதீர்கள்.

அதன்பிறகு ஏப்ரல் 9 – ம் தேதியிலிருந்து ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிறுகளில் இரவு 8.00 மணிக்கு இந்த குதூகலமான போட்டி நிகழ்வை கண்டு ரசியுங்கள். பார்வையாளர்கள் அவர்களது வசதிக்கேற்ப எந்த நேரத்திலும் இந்நிகழ்ச்சியை காண
VOOT
– ஐ டியூன் செய்யலாம்.

பீஸ்ட் படத்தின் அப்டேட்: Exclusive தகவல்!

அடுத்த செய்திஇதை கொஞ்சம் தவிர்த்திருக்கலாமே நெல்சன்..!அதுக்குன்னு இப்படியா ?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.