தங்கத்தினை பிடிக்காத பெண்கள் உண்டா? என்றால் நிச்சயம் இருக்காது? குறிப்பாக இந்தியாவில் தங்கத்தின் மீதுள்ள ஈர்ப்பு அதிகம். இது இந்தியா மட்டும் உலக நாடுகள் முழுவதுமே பரவத் தொடங்கியுள்ளது. இதற்கு இந்தியாவின் நகை ஏற்றுமதியே முக்கிய சாட்சி.
இன்றைய காலகட்டத்தில் முதலீடுகளிலும் முக்கிய பங்கு வகிக்கும் தங்கம், போர்ட்போலியோ முதலீடுகளிலும் மிக அவசியமான ஒன்றாக இருந்து வருகின்றது.
இது வெறுமனே முதலீடாக மட்டும் அல்லாமல், பாதுகாப்பு புகலிடமாகவும், சிறந்த ஹெட்ஜிங் ஆகவும் பார்க்கப்படுகின்றது. அப்படிப்பட்ட தங்கத்தின் விலையானது நடப்பு ஆண்டில் எப்படியிருக்கும். தொடர்ந்து இனி வாங்கலாமா? வேண்டாமா? அடுத்து என்ன செய்யலாம்? நிபுணர்களின் கணிப்பு என்ன? வாருங்கள் பார்க்கலாம்.
நேற்று தமிழ்நாட்டில் முதலீடு, இன்று UAE-யில் ஐபிஓ-வா..? அசத்தும் லூலூ குரூப் யூசுப் அலி..!
தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்?
தங்கம் விலையானது நடப்பு ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் மிக நல்ல லாபம் கொடுத்த முதலீடுகளில் ஒன்றாக இருந்தது. இது இன்னும் ஏற்றம் காணலாம் என்றே நிபுணர்கள் கனித்துள்ளனர். எனினும் ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் கொள்கைகள், சீனாவின் பரவி வரும் கொரோனாவின் மத்தியில் ஏதேனும் ஊக்கத் தொகை பற்றிய அறிவிப்பு வருமா? பல காரணிகளும் கவனிக்க வேண்டிய விஷயங்களாக உள்ளன. இது தங்கம் விலையில் மீண்டும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மீடியம் டெர்மில் கவனிக்க வேண்டிய முக்கிய காரணி
மீடியம் டெர்மில் குறிப்பாக கவனிக்க வேண்டிய இரு காரணிகள் உள்ளன. ஒன்று வட்டி விகிதம் அதிகரிப்பு. இரண்டாவது உக்ரைன் – ரஷ்யா பிரச்சனை. இப்பிரச்சனையில் ஏதேனும் முன்னேற்றம் ஏற்படும்போது அது குறுகிய காலத்தில் தங்கத்தின் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்த கூடும். அதேபோல நடப்பு ஆண்டில் அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தினை இன்னும் ஆறு முறை அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இதுவும் தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தக்கூடும்.
கவலையளிக்கும் பணவீக்கம்
எனினும் பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் சப்ளை சங்கியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு உலோகங்களின் விலையானது விண்ணை எட்டியுள்ளது. பல முக்கிய கமாடிட்டிகளின் விலையானது அதிகரித்துள்ளது. இது உலகம் முழுவதும் பணவீக்கத்தினை தூண்டும் முக்கிய காரணியாக உள்ளது. இது பாதுகாப்பு புகலிடமாக தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம்.
இப்படி ஒரு விஷயம் இருக்கா?
இதற்கிடையில் ஏற்ற இறக்கத்தில் இருக்கும் பத்திர சந்தையும் கவனிக்க வேண்டிய முக்கிய காரணிகளில் ஒன்றாக இருந்தது. எனினும் ரஷ்யா – உக்ரைன் இடையேயான சுமூக தீர்வானது, மீண்டும் உலோகங்கள் விலையினை பழைய நிலைக்கு கொண்டு வரலாம். பணவீக்கத்தினை கட்டுக்குள் கொண்டு வரலாம். வங்கிகளை வட்டி விகிதத்தினை பழைய நிலைக்கு கொண்டு வர தூண்டலாம். மொத்தத்தில் தங்கம் விலையும் இயல்பு நிலைக்கு திரும்பலாம்.
விலை சரியக்கூடும்
மேலும் தொடர்ந்து முதல் மூன்று மாதங்களாக பார்க்கும்போது மொத்தத்தில் தங்கம் விலையானது ஏற்றத்தில் தான் காணப்படுகின்றது. சொல்லப்போனால் சர்வதேச சந்தையில் அதன் ஆல் டைம் உச்சத்தினையும் உடைத்துள்ளது. இது மேற்கொண்டு தங்கம் விலையினை சரிய காரணமாக அமையலாம். போர் முடிவுக்கு வரும் பட்சத்தில் முதலீட்டாளர்கள் லாபத்தினை புக் செய்யலாம். மேலும் ஷார்ட் கவரிங்கும் செய்யலாம். இதுவும் தங்கம் விலைக்கு சாதகமாக அமையலாம்.
பணவீக்கத்தினை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை
ரஷ்யா – உக்ரைன் இடையேயான பிரச்சனைகள் இருந்தாலும், மத்திய வங்கிகளில் பணவீக்கத்தினை குறைக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளன. இது நீண்டகால நோக்கில் பணவீக்கத்தினை கட்டுக்குள் கொண்டு வரும். இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்தின் விலை அதிகரிக்க காரணமாக அமையலாம். மொத்தத்தில் தங்கத்தின் நீண்டகால ஏற்றத்தினை இது மெதுவாக தடுக்கலாம்.
நீண்டகால சொத்து
பொதுவாக தங்கத்தில் ஈவுத் தொகை, வட்டி என வருமானம் இல்லாவிட்டாலும், தற்போதைய காலக்கட்டத்தில் நீண்டகால ஆதாயம் தரும் ஒரு முதலீடாக உள்ளது. இது வட்டியில்லா முதலீடாக இருந்தாலும், பெரும்பாலும் மிக மோசமான காலகட்டங்களில் நீண்டகால சொத்தினை போல செயல்படுகிறது.
மூன்றாவது போர் வருமா?
தொடர்ந்து ரஷ்யா – உக்ரைன் இடையேயான போரினை முடிவுக்கு கொண்டு வர இவ்விரு நாடுகளும் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றன. எனினும் இந்த பிரச்சனை இத்தோடு முடிவுக்கு வருமா? அல்லது மேற்கொண்டு மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்குமா? என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது. மொத்தத்தில் நடப்பு நிதியாண்டில் தங்கத்தின் விலையானது கடந்த ஆண்டினை காட்டிலும் ஏற்ற இறக்கம் அதிகரிக்கலாம். நீண்டகால நோக்கில் பார்க்கும்போது உக்ரைன் – ரஷ்யா போரே வழிவகுக்கலாம்.
Gold prices may be volatile in the current year and may fall slightly in the medium term
Gold prices may be volatile in the current year and may fall slightly in the medium term/தங்கம் விலை மீடியம் டெர்மில் குறையலாம்.. நிபுணர்களின் கொடுத்த இன்ப அதிர்ச்சி..!