பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான்கான் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளனர். இந்த தீர்மானம் மீது இன்று வாக்கெடுப்பு நடக்க உள்ளது.
பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய மறுத்துள்ள இம்ரான்கான் தன் அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொள்வேன் என அறிவித்தார். மேலும் தன்னை பதவியில் இருந்து அகற்ற வெளிநாட்டு சதி உள்ளதாக குற்றம் சாட்டினார்.
இந்நிலையில் இன்னும் சற்று நேரத்தில் பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு நடைபெறுவதை முன்னிட்டு பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று நகரில் வன்முறை ஏற்பட வாய்ப்புள்ளதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் நுழைவதைத் தடுக்கக்கூடும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படியுங்கள்..
மசூதிகளில் இருந்து ஒலி பெருக்கிகளை அகற்ற வேண்டும்- மகாராஷ்டிரா அரசுக்கு ராஜ் தாக்கரே கோரிக்கை