கடந்த 1990-களில் தீவிரவாதத் தால் காஷ்மீரை விட்டு லட்சக்கணக்கான பண்டிட் சமூகத்தினர் வெளியேற்றப்பட்டனர்.
இந்நிலையில் ‘காஷ்மீர் பண்டிட்கள் (உதவி, மறுசீரமைப்பு, மறுவாழ்வு மற்றும் மீள்குடி யேற்றம்) சட்டம் 2022′ என்ற தலைப்பில் மாநிலங்களவையில் காங்கிரஸ் உறுப்பினர் விவேக் தன்கா நேற்று முன்தினம் தனிநபர் மசோதா கொண்டு வந்தார்.
பண்டிட் சமூகத்தினருக்கு சமூக, அரசியல் மற்றும் பொருளாதார மறுவாழ்வு அளிப்பது, அவர்களின் சொத்துகளை பாதுகாப்பது, அவர் களின் கலாச்சார பாரம்பரியத்தை மீட்டெடுப்பது, பாதுகாப்பை உறுதிசெய்வது, அவர்களுக்கு மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்ற நிதி வழங்குவது ஆகியவற்றுக்கு இந்த மசோதா வகை செய்கிறது.
மேலும் 1988 தொடங்கி, காஷ்மீர் பள்ளத் தாக்கில் பண்டிட்களுக்கு எதிரான அட்டூழியங்கள் மற்றும் அவலங்கள் தொடர்பான அனைத்து நிகழ்வுகளையும் ஆவணப்படுத்தும் ஒரு வெள்ளை அறிக்கை வெளியிடுவதும் மசோதாவில் அடங்கும்.
உச்ச நீதிமன்ற மூத்த வழக் கறிஞரான விவேக் தன்கா ஜூன் மாதம் எம்.பி. பதவியில் இருந்து ஓய்வு பெறுகிறார். இவரை, ம.பி.யில் இருந்து காங்கிரஸ் மீண்டும் தேர்வு செய்யாவிட்டால் இந்த மசோதா காலாவதியாகிவிடும்.