கல்லஹள்ளி : கல்லஹள்ளி வன்மிக மஹா மாரியம்மன் கோவில் மஹா கும்பாபிேஷக விழா நாளை துவங்குகிறது. இம்மாதம் 6ல் கும்பாபிஷேகம் நடக்கிறது.வன்மிக மஹா மாரியம்மன் கோவில், ஹலசூரு ஏரிக்கரை அருகிலுள்ள கல்லஹள்ளியில் அமைந்துள்ளது. இப்பகுதியில் திராட்சை பூங்காவுடன் சில வீடுகள் அமைந்திருந்தன.
பல ஆண்டுகளாக இக்கோவில் உள்ளது.இப்பகுதியில் பெங்களூரு அபிவிருத்தி ஆணையம், நடுத்தர குடும்பத்தினர் வசிப்பதற்காக வீடுகள் கட்டினர். நுாற்றுக்கணக்கானோர் வசித்த வந்த இப்பகுதியில், நாளடைவில் ஆயிரக்கணக்கானோர் வசிக்க துவங்கினர்.இதை தொடர்ந்து அங்கிருந்த மாரியம்மன் கோவில், 1997 ல் சீரமைக்கப்பட்டது. இப்பகுதி மக்களின் கனவு நனவானது. 1997 அக்டோபர் 27ல் நடந்த கும்பாபிேஷகத்தில் மாரியம்மன் விக்ரஹம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.இதையடுத்து ஆண்டுதோறும், மூன்று நாட்கள் பிரதிஷ்டை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. நவராத்திரி 10 நாட்கள், தேர் திருவிழா, ஆடி மாத விழா விமரிசையாக நடக்கிறது.2010 ஜூன் 4 ல், இரண்டாவது முறையாக கும்பாபிேஷகம் நடத்தப்பட்டது. அப்போது, 10 அடி உயரத்தில், 10 கைகளுடன் அம்மன் சிலை, விநாயகர், முருகர், அய்யப்பன், தட்சிணா மூர்த்தி உருவசிலை நிறுவப்பட்டது.இக்கோவில் சீரமைக்கப்பட்டு 25ம் ஆண்டு விழாவும், மூன்றாவது கும்பாபிேஷக விழாவும் நாளை துவங்குகிறது.முதல் நாளான, நாளை காலையில், விக்னேஸ்வர பூஜை, மஹா சங்கல்பம், கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், பூர்ணாஹுதி, தீபாராதனை, பிரசாத வினியோகம்; மதியம் அன்னதானம்;மாலையில் வாஸ்து சாந்தி, திச ஹோமம், மிருத்சங்கிரஹனம், பூமி பூஜை, அங்குரார்ப்பணம், ரக் ஷ பந்தனம், கும்ப அலங்காரம், கலகராசனம், கும்ப ஸ்தாபனம், யாகசாலை பிரவேசம், மண்டப பூஜை, யாக பூஜை, பூர்ணாஹுதி, தீபாராதனை,
பிரசாதம் வினியோகம்இரண்டாம் நாளான 5ல், காலையில் கோ பூஜை, தன பூஜை, யாகசாலை பூஜை, ஹோமம் துவக்கம், பூர்ணாஹுதி, தீபாராதனை, பிரசாதம் வினியோகம்; மதியம் அன்னதானம்;மாலையில் கோபுர விமான கலச ஸ்தாபனம், அஷ்டபந்தனம், வடுக பூஜை, கன்யா பூஜை, சுஹாசினி பூஜை, யாக பூஜை ஆரம்பம், பூர்ணாஹுதி, தீபாராதனை, பிரசாத வினியோகம்;மூன்றாம் நாளான 6 ல், விக்னேஸ்வரா பூஜை, பிம்ப சுத்தி, ரக் ஷாபந்தனம், யாகசாலை பூஜை, நாடி சந்தானம், பூர்ணாஹுதி, தீபாராதனை, யாத்ரதானம், கிரஹ பிரீத்தி, கலச யாத்ரா, கோபுர மஹா கும்பாபிேஷகம், வன்மிக மஹா மாரியம்மன், விநாயகர்,
அய்யப்பன், முருகன், தட்சிணா மூர்த்திக்கு மஹா கும்பாபிேஷகம் நடக்கிறது. மஹா தீபாராதனை, சமபந்தி போஜனம், மாலையில் தேர் ஊர்வலம் நடக்கிறது.தமிழகம் மதிரமங்களம் மயூரநாத குருக்கள், பெங்களூரு மீனாட்சி சுந்தரம் குருக்கள், ஒருங்கிணைப்பாளர் சுகுமாரன் குருசாமி, தமிழகம் மகாபலிபுரம் ஸ்தபதி ரவிச்சந்திரன் உட்பட பலர் பங்கேற்கின்றனர், என கோவில் தர்மகர்த்தா ராமராஜ் தெரிவித்தார்.