பாகிஸ்தான் அரசு பஞ்சாப் மாகாண ஆளுநர் சவுத்ரி முகமது சர்வாரைப் பதவியில் இருந்து நீக்கியுள்ளது.
இம்ரான் கான் அரசு மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் வாக்கெடுப்புக்குச் சில மணி நேரங்களுக்கு முன் அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. பஞ்சாப் ஆளுநர் பதவி நீக்கம் குறித்துத் தகவல் அறிவித்த செய்தித் துறை அமைச்சர் பாவத் சவுத்ரி, எதற்காகப் பதவி நீக்கம் என்பது குறித்து எந்தத் தகவலையும் தெரிவிக்கவில்லை.
புதிய ஆளுநர் யார் எனப் பின்னர் அறிவிக்கப்படும் என்றும், அதுவரை பஞ்சாப் சட்டமன்றத்தின் துணை சபாநாயகர் பொறுப்பு ஆளுநராகச் செயல்படுவார் என்றும் பாவத் சவுத்ரி தெரிவித்தார்.