சென்னை:
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில் கூறியிருப்பதாவது:-
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வருகிற 7-ந் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகிறது. இதனால் 5,6-ந் தேதிகளில் அந்தமான், நிக்கோபர் தீவுகளில் கனமழை பெய்யக்கூடும்.
இதன் காரணமாக தமிழகத்தில் பெரிய அளவில் மழைக்கு வாய்ப்பு இல்லை. என்றாலும் அடுத்த 5 நாட்களுக்கு லேசான மழையை எதிர்பார்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் தமிழக பகுதியின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் ஒரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 1 டிகிரி செல்சியஸ் முதல் 2 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஒரளவு மேக மூட்டத்துடன் காணப்படும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.