சென்னை:
கொரோனா பாதிப்பில் இருந்து பாதுகாத்து கொள்ள தடுப்பூசி மட்டுமே ஆயுதமாக இருப்பதால் தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.
சனிக்கிழமை தோறும் தமிழகம் முழுவதும் மெகா சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டாலும் பொதுமக்கள் அதனை முறையாக பயன் படுத்த வில்லை.
ஒரு கோடி பேருக்கு மேல் 2-வது தவனை தடுப்பூசியூம், 50 லட்சம் பேர் முதல் தவனை தடுப்பூசியும் போடாமல் இருந்து வருவதால் சுகாதாரத்துறை கவலை அடைந்துள்ளது. தேவையான அளவில் தடுப்பூசி இருப்பு இருந்த போதிலும் அதனை மக்கள் பயன்படுத்தாமல் இருப்பதால் சுகாதாரத்துறையினர் வேதனை அடைந்துள்ளனர். இதனால் இந்த பணியில் ஈடுபட்டுள்ள சுகாதார ஊழியர்கள் சோர்வடைந்துள்ளனர்.
இதுகுறித்து பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் கூறியதாவது:-
27-வது மெகா தடுப்பூசி முகாமில் 4 லட்சம பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். தடுப்பூசி செலுத்துபவர்கள் எண்ணிக்கை குறைந்து வந்தாலும் கூட மெகா தடுப்பூசி முகாம்கள் தொடர்ந்து நடை பெறும்.
60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் கட்டாயம் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். இணை நோய் உள்ளவர்களும் உடனடியாக போட்டு கொள்ள வேண்டும். 2தவணை தடுப்பூசி போட்ட முதியவர்கள் பூஸ்டர் போட்டால் உயிர் இழப்பை தவிர்க்கலாம். அவர்களுக்கு தான் பாதிப்பு அதிகமாக வர வாய்ப்பு உள்ளது. அதனால் அலட்சியமாக இருக்காமல் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொண்டு கொரோனாவில் இருந்து பாதுகாப்பாக இருக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்… விடுதலை சிறுத்தைகட்சியில் மாவட்ட நிர்வாகம் மாற்ற முடிவு- திருமாவளவன் தேர்வு செய்கிறார்