அமராவதி: ஆந்திரா மாநிலத்தில் மக்களவை தொகுதிக்கு ஏற்ப கூடுதலாக 13 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டு நாளை தொடங்கி வைக்கப்படுகிறது.
ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஒவ்வொரு மக்களவைத் தொகுதியும் ஒரு மாவட்டமாக மாற்றப்படும் என கடந்த தேர்தலின்போது வாக்குறுதி அளித்திருந்தார். அதற்கான பணிகள் நடைபெற்று வந்தன. ஜனவரியில் 13 புதிய மாவட்டங்களை பிரிப்பதற்கான வரைவு அறிவிப்பை வெளியிட்டு பரிந்துரைகள் மற்றும் ஆட்சேபனைகளை கேட்டது. அதனடிப்படையில் 13 புதிய மாவட்டங்களுக்கான அறிவிப்பு அரசிதழிலில் வெளியிட்டப்பட்டுள்ளது.
ஆந்திர அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியதாவது:
ஆந்தரிாவில் புதிய மாவட்டங்கள் அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளன. புதிய மாவட்டங்களின் மறுசீரமைப்பு செயல்முறையை முதல்வர் வழிகாட்டுதலின் கீழ் அமைக்கப்பட்ட நான்கு துணைக் குழுக்கள் செய்து முடிந்துள்ளன.
அதன்படி இந்த மாவட்டங்கள் அமைக்கப்பட்டன. 13 புதிய மாவட்டங்களை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி நாளை தொடங்கி வைக்கிறார். புதிய மாவட்டங்களின் இணையதளங்கள் மற்றும் கையேடுகளை வெளியிடுகிறார். மாவட்ட அலுவலகங்களில் அதிகாரிகள் பொறுப்பேற்கும் வகையில் அலுவலக ஒதுக்கீடு செய்யப்படும்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது,