CSK vs PBKS; அதிரடி காட்டிய லிவிங்ஸ்டன்; பஞ்சாப் 13 ஓவர்களில் 131/4

IPL Match 11 CSK vs PBKS Live Score Updates: ஐபிஎல் போட்டிகளின் 11 ஆவது லீக் போட்டியில் இன்று (ஏப்ரல் 3) சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின.

சென்னை – பஞ்சாப் அணிகளுக்கிடையேயான இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

சென்னை அணி இதுவரை விளையாடியுள்ள 2 ஆட்டங்களிலும் தோல்வியைச் சந்தித்துள்ள நிலையில், இன்று வெற்றி கணக்கை துவங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர்.

சென்னை அணி விளையாடும் XI: ருதுராஜ், உத்தப்பா, மொயீன் அலி, ராயுடு, ஜடேஜா, தோனி, சிவம் துபே, ப்ராவோ, ஜோர்டன், பிரிட்டோரியஸ், முகேஷ் சௌத்ரி

பஞ்சாப் அணி விளையாடும் XI: மயங்க் அகர்வால், தவான், பனுகா ராஜபக்சே, லிவிங்ஸ்டன், ஷாரூக்கான், ஜிதேஷ் ஷர்மா, ஒடியன் ஸ்மித், அர்ஷ்தீப் சிங், ரபாடா, ராகுல் சாஹர், வைபவ் அரோரா

பஞ்சாப் பேட்டிங்

பஞ்சாப் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் மயங்க அகர்வால் மற்றும் தவான் களமிறங்கினர். முதல் பந்தை பவுண்டரிக்கு விளாசிய அகர்வால் இரண்டாவது பந்திலே அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். அவர் முகேஷ் செளத்ரி பந்தில் உத்தப்பாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்ததாக களமிறங்கிய பனுகா ராஜபக்சே ஒரு சிக்சர் அடித்த நிலையில் ரன் அவுட் ஆனார். அவர் 9 ரன்களில் வெளியேறினார்.

அடுத்ததாக தவாணுடன் ஜோடி சேர்ந்த லிவிங்ஸ்டன் அற்புதமாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டார். சிறப்பாக விளையாடி தவாண் 33 ரன்களில் அவுட் ஆனார். 24 பந்துகளைச் சந்தித்த தவான், 4 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸ் அடித்து, ப்ராவோ பந்தில் ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். மறுபுறம் சிறப்பாக விளையாடிய லிவிங்ஸ்டன் அரை சதம் அடித்தார்.

சென்னை பவுலர்களை வெளுந்து வாங்கிய லிவிங்ஸ்டன் 32 பந்தில் 60 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இதில் 5 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்சர்கள் அடங்கும். இவர் ஜடேஜா பந்தில் ராயுடுவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். தற்போது ஜிதேஷ் ஷர்மா மற்றும் ஷாரூக்கான் விளையாடி வருகின்றனர்.

பஞ்சாப் அணி 13 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்த நிலையில் 131 ரன்களுடன் விளையாடி வருகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.