மும்பை: டிவி ரியாலிட்டி ஷோவில், எனக்கு ரசிகர் ஓட்டுப் போட்டால் எனது டி-ஷர்ட்டை கழற்றி காட்டுவேன் என்று ஆபாச நடிகை தனது ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். பாலிவுட் நடிகை பூனம் பாண்டேயின் அரை நிர்வாண படங்கள், வீடியோக்கள் அவ்வப்போது வெளியாகும். கடந்த 2013ம் ஆண்டு பாலிவுட்டில் அறிமுகமான இவர், தற்போது டிவி ரியாலிட்டி ஷோவில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார். அந்த போட்டியில் இருந்து வெளியேறுவதை தவிர்க்க, ரசிகர்கள் தனக்கு வாக்களிக்க வேண்டும் என்றும், அவ்வாறு வாக்களித்தால் டிவி ஷோவின் நேரலையில் தனது டி-ஷர்ட்டை கழற்றிவிடுவேன் என்று உறுதியளித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், ‘ரசிகர்கள் அனைவரும் எனக்கு ஓட்டுப் போட்டு காப்பாற்றுங்கள். அதன்பின்னர் இந்த சிறையில் என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்திருந்து பாருங்கள்’ என்றார்.தனது டி-ஷர்ட்டை நேரலையில் கழற்றுவேன் என்று பூனம் பாண்டே கூறியதை கேட்ட சக போட்டியாளர்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். ஆனால் பூனம் பாண்டே தனது சிரிப்பை அடக்க முடியாமல் நீண்ட நேரம் சிரத்துக் கொண்டே இருந்தார். முன்னதாக அந்த டிவி ஷோவில் பங்கேற்றுள்ள நடிகை கங்கனா, ‘அடல்ட் (செக்ஸ் படங்கள்) சினிமாக்களை தயாரித்ததை ஒப்புக்கொள்கிறீர்களா? அடல்ட் படங்களைத் தயாரித்து அதையும் விளம்பரப்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்களா? என்று கேட்டார். அதற்கு பதிலளித்த பூனம் பாண்டே, ‘இதுவரை நான் எடுத்த வீடியோ மற்றும் புகைப்படத்தில் விதிமுறைகள் மீறப்படவில்லை. எந்த சட்டத்தையும் நான் மீறவில்லை. போலியான ஒன்றை மக்கள் விரும்பும் அதேநேரத்தில் மக்கள் உண்மையானதை விரும்புவார்கள் என்பதில் நான் நம்புகிறேன்’ என்றார்.