#சென்னை || 12 ஆண்டுகளாக சிறுமி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிய கொடூரம்.! 

சென்னையில் 9 வயது முதல் 21 வயது வரை தொடர்ந்து 12 ஆண்டுகளாக, இளம்பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிய சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும், அந்த இளம் பெண்ணின் தாய்மாமன் கைது செய்யப்பட்டுள்ளார். 

சென்னை, ராயபுரம் பகுதி : 9 வயது ஒன்பது வயது சிறுமியின் தாய் மாமன் தேசப்பன்-க்கு தத்து கொடுத்ததாக தெரிகிறது. அப்போது முதல் அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். 

அந்த சிறுமி அவனிடமிருந்து தப்பித்து காப்பகம் ஒன்றில் தஞ்சம் அடைந்துள்ளார். அப்போதும் விடாத தேசப்பன், அந்த சிறுமியை மீண்டும் வீட்டுக்கு அழைத்து வந்து தனது கூட்டாளிகளுடன் கூட்டுப் பாலியல் வன்கொடுமை ஆக்கியுள்ளான்.

தேசப்பன்-க்கு அவரது மனைவியும், அந்த இளம் பெண்ணின் தாயும் உடந்தையாக இருந்துள்ளனர். இந்த சம்பவத்தில் அந்த சிறுமியின் தாய் உள்ளிட்ட 3 பெண்களை போலீசார் கைது செய்ய நிலையில், தற்போது தேசப்பன் கேரள மாநிலத்தில் வைத்தும், அவரின் கூட்டாளி ஒருவர் சென்னையில் வைத்தும் போலீசார் தற்போது அதிரடியாக கைது செய்துள்ளனர்.

மேலும், சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி மற்ற நபர்கள் குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.