மொரேனா-மத்திய பிரதேசத்தில் செவிலியர் தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த புகார் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.
ம.பி.,யில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, மொரேனா மாவட்ட தலைமை மருத்துவமனையில், செவிலியர் கல்லுாரி மாணவர்களுக்கான ‘செமஸ்டர்’ தேர்வு சமீபத்தில் நடந்தது.இதில் முறைகேடு நடந்துள்ளது தொடர்பான ‘வீடியோ’ சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வீடியோவில், தேர்வில் பங்கேற்ற மாணவர்கள், கேள்விக்கான விடைகளை மொபைல் போன்களில் தேடுகின்றனர்.சிலர் கேள்வித்தாளை புகைப்படம் எடுத்து அனுப்பி, அங்கிருந்து ‘வாட்ஸ் ஆப்’ சமூக வலைதளம் வாயிலாக வந்த விடைகளை எழுதுகின்றனர்.
இதுகுறித்து, தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் ராகேஷ் சர்மா கூறியதாவது:தேர்வு முறைகேடு தொடர்பாக விசாரிக்க, ஐந்து பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு உள்ளது.இந்த குழு, 15 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யும். முறைகேடு நடந்தது உறுதியானால், சம்பந்தப்பட்ட தனியார் கல்லுாரிகளின் பதிவு ரத்து செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement