இலங்கையில் தொடரும் சிக்கல்! மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகுகிறாரா?

நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை அரசு, நட்பு நாடுகளின் உதவியை இலங்கை நாடியுள்ளது. நாட்டில் தொடரும் பொருளாதார சிக்கல்கள், மின்வெட்டைப் போலவே அதிகரித்துக் கொண்டே செல்கின்றன.

பொருளாதார நெருக்கடிள் அதிகரித்து வரும் நிலையில், நாட்டில் அதிகரித்துவரும் போராட்டங்களும், அரசின் இயலாமையும் சேர்ந்து, பிரதமர் மகிந்த ராஜபக்ச ராஜினாமா செய்யலாம் என்று ஊகங்கள் உலா வந்தன.

அது தொடர்பாக இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவின் அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை மறுப்பு தெரிவித்துள்ளது. பிரதமர் பதவியில் இருந்து விலகும் பேச்சுக்கே இடம் இல்லை என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

 

 

இலங்கை தற்போது அன்னிய செலாவணி பற்றாக்குறையை எதிர்நோக்கியுள்ளது இதன் காரணமாக உணவு, எரிபொருள், மின்சாரம் மற்றும் எரிவாயு ஆகியவற்றிற்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

நிதி உதவிக்காக நட்பு நாடுகளின் உதவியை இலங்கை நாடியுள்ளது. நாட்டில் நாள்தோறும் பல மணி நேரம் மின்வெட்டு அமலில் உள்ளது.

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கான காரணம் என்ன, ஜனாதிபதி ஏன் அவசரநிலை பிரகடனம் செய்தார்?

மேலும் படிக்க | தவிக்கும் இலங்கைக்கு உதவ முன்வந்த இந்திய அரசு

ஊரடங்கு உத்தரவையும் மீறி மக்கள் போராட்டம் நடத்துகின்றனர்

நகரில் உள்ள அனைத்து கார்களும் பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டு சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

நகரின் அனைத்துப் பகுதிகளிலும் காவல் துறையினரும் ராணுவத்தினரும் நிறுத்தப்பட்டு வாகனச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஆனாலும் நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மக்கள் ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே செல்கின்றனர்.

நாடு முழுவதிலும் உள்ள சிறிய வீதிகள், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் பல பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக இலங்கை ஊடகமான Colombo Gazette தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க | கலவரமாக மாறிய போராட்டம்! தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு என இலங்கையில் பதற்றம்

“கோ கோட்டாபய கோ” என்ற முழகக்த்துடன் அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சியினர் இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஞாயிற்றுக்கிழமையன்று (2022, ஏப்ரல் 3) கொழும்புவின் வீதிகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ஷவின் இல்லத்திற்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களை அடுத்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நிலைமை மோசமடைந்துள்ளது, பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் ஜனாதிபதி அவசரநிலையை பிரகடனம் செய்துள்ளார்

சனிக்கிழமை மாலை 6 மணி முதல் திங்கட்கிழமை காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உத்தரவை மீறியதற்காக 600க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களை இலங்கை அரசு ஞாயிற்றுக்கிழமை கைது செய்தது.

மேல் மாகாணத்தில் நேற்று இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரையான காலப்பகுதியில் 664 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

அதிபர் மாளிகை முன் தற்கொலை

போராட்டத்தின் போது குடிபோதையில் இருந்ததாக கூறப்படும் 53 வயதுடைய நபர் ஒருவர் மிரிஹானவில் உள்ள இலங்கை அதிபரின் வீட்டிற்கு முன்பாக தற்கொலை செய்து கொண்டதாக உள்ளூர் போலீசார் தெரிவித்தனர்.

எதிர்ப்புகளை சமாளிக்க ஏப்ரல் 3 ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுக்குப் பிறகு இலங்கை அரசாங்கம் நாடு தழுவிய சமூக ஊடகத் தடையை மேற்கொண்டது. Facebook, Twitter, WhatsApp, YouTube, Snapchat, TikTok மற்றும் Instagram உள்ளிட்ட இரண்டு டஜன் சமூக ஊடக தளங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்க | இலங்கை யாழ்ப்பாணம் மாபெரும் கண்டன பேரணியில் மோதல்.. உயிர் தப்பித்த போலீசார்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.