உத்தர்காசி,
கர்வால் இமயமலையில் அமைந்துள்ள புகழ்பெற்ற கங்கோத்ரி கோவிலின் நடை அட்சய திருதியையை முன்னிட்டு மே 3 ஆம் தேதி பக்தர்களுக்காக திறக்கப்படும் என்று கோயில் கமிட்டி இன்று தெரிவித்துள்ளது.
அட்சய திருதியை அன்று காலை 11.15 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, அடுத்த 6 மாதங்களுக்கு பக்தர்கள் கோவிலில் பிரார்த்தனை செய்ய முடியும் என்று கங்கோத்ரி கோயில் கமிட்டியின் செயலாளர் சுரேஷ் செம்வால் தெரிவித்தார். மேலும் யமுனோத்ரி கோவிலின் நடை திறப்பதற்கான நேரம் ஏப்ரல் 7 ஆம் தேதி யமுனா ஜெயந்தி அன்று முடிவு செய்யப்படும் என்றும் செம்வால் கூறினார்.
கடுமையான பனிப்பொழிவு காரணமாக கர்வால் இமயமலையின் நான்கு கோவில்களின் கதவுகள் குளிர்காலத்தில் அடைக்கப்பட்டு, ஏப்ரல்-மே மாதங்களில் மீண்டும் திறக்கப்படுகிறது. இதன்படி கேதார்நாத்தின் கோவில்நடை மே 6ஆம் தேதியும், பத்ரிநாத்தின் கோவில் நடை மே 8ஆம் தேதியும் திறக்கப்படும்.