விழுப்புரம்: விழுப்புரத்தில் இன்று காலை சமத்துவபுரத்தை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின், தொடர்ந்து அம்மாவட்டத்தில் ரூ.42 கோடி மதிப்பிலான நலத்திட் உதவிகளை வழங்கி சிறப்பித்தார்.
விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம் கொழுவாரி ஊராட்சி பகுதியில் பெரியார் நினைவு சமத்துவபுரம் வீடுகள் 100 கட்டப்பட்டுள்ளது. இந்த வீடுகளை திறந்து வைப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை புதுச்சேரி சென்ற முதலமைச்சர் அங்கிருந்து, இன்று காலை 10 மணிக்கு விழுப்புரம் வந்தார்.
தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டம் கொழுவாரி ஊராட்சி பகுதியில் சமத்துவபுரம் அமைக்கப்பட்டுள்ள வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பெரியார் உருவ சிலையையும் திறந்து வைத்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். அங்கு ரூ.2.88 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 100 வீடுகள் கொண்ட பெரியார் நினைவு சமத்துவபுரத்தை இன்று காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து, பயனாளிகளுக்கு வீட்டுக்கான சாவியை வழங்கினார்.
தொடர்ந்து, அந்த வீடுகளை பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின் அங்கு வசிக்கும் மக்களிடம் வசதிகள் குறித்து கேட்டறிந்தார். அங்குள்ள உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் புதிதாக உருவாக்கப்பட்ட பசுமை தோட்டங்கள் ஆகியவற்றையும் பார்வையிட்டார். இதையடுத்து சமத்துவபுரத்தில் அமைந்துள்ள கலைஞர் பூங்கா, விளையாட்டு திடல், ரேசன் கடையை திறந்து வைத்தார்.
அதைத்தொடர்ந்து, ஒழிந்தியாம்பட்டு கிராமத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர் ஸ்டாலின், 10 ஆயிரம் பயனாளிகளுக்கு 42 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.விழாவில் பேசிய முதல்வர், மக்களுக்கான திட்டங்களை உடனடியாக செய்து கொடுக்கும் துறையாக உள்ளாட்சித் துறை இருக்க வேண்டும் என கூறினார்.
இதனையடுத்து, திண்டிவனம் அருகே பெலாக்குப்பம் கிராமத்தில் 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்படவுள்ள சிப்காட் தொழிற் பூங்காவுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டுகிறார்.
முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு, 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இந்த பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் விழுப்புரம் மண்டல சரக டிஐஜி உள்ளிட்டோர் நேரில் ஆய்வு செய்தனர்.
#tdi_1 .td-doubleSlider-2 .td-item1 {
background: url(https://www.tamilfox.com/wp-content/uploads/2022/04/stalin-vilupuram-samthuvaram-05-04-04.jpg) 0 0 no-repeat;
}
#tdi_1 .td-doubleSlider-2 .td-item2 {
background: url(https://www.tamilfox.com/wp-content/uploads/2022/04/stalin-vilupuram-samthuvaram-05-04-05.jpg) 0 0 no-repeat;
}
#tdi_1 .td-doubleSlider-2 .td-item3 {
background: url(https://www.tamilfox.com/wp-content/uploads/2022/04/stalin-vilupuram-samthuvaram-05-04-03.jpg) 0 0 no-repeat;
}
#tdi_1 .td-doubleSlider-2 .td-item4 {
background: url(https://www.tamilfox.com/wp-content/uploads/2022/04/stalin-vilupuram-samthuvaram-05-04-02.jpg) 0 0 no-repeat;
}
#tdi_1 .td-doubleSlider-2 .td-item5 {
background: url(https://www.tamilfox.com/wp-content/uploads/2022/04/stalin-vilupuram-samthuvaram-05-04-01.jpg) 0 0 no-repeat;
}
#tdi_1 .td-doubleSlider-2 .td-item6 {
background: url(https://www.tamilfox.com/wp-content/uploads/2022/04/stalin-vilupuram-samthuvaram-05-04-06.jpg) 0 0 no-repeat;
}
#tdi_1 .td-doubleSlider-2 .td-item7 {
background: url(https://www.tamilfox.com/wp-content/uploads/2022/04/stalin-vilupuram-samthuvaram-05-04-07.jpg) 0 0 no-repeat;
}