டுவிட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை வாங்கினார் எலான் மஸ்க்| Dinamalar

நியூயார்க்: சமூக வலைதளமான டுவிட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரும் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் அதிபருமான எலான் மஸ்க் . டுவிட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை வாங்கியுள்ளார்

. இது தொடர்பாக அமெரிக்க பங்குச்சந்தை ஒழுங்கு முறை அமைப்பிற்கு அளித்த அறிக்கையில் டுவிட்டர் நிறுவனத்தின் 7 கோடியே 34 லட்சம் டுவிட்டர் பங்குகள் வாங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் டுவிட்டரின் மிகப்பெரிய பங்குதாரராகிறார் எலான்மஸ்க். டுவிட்டர் பங்குகளை எலான் மஸ்க் வாங்கியதையடுத்து டுவிட்டர் நிறுவனத்தின் வர்த்தகம் 26% உயர்ந்தது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.