உக்ரைன் தலைநகர் பகுதியில் இருந்து வெளியேறும் ரஷ்ய துருப்புகள், உக்ரேனிய மக்களின் சடலங்களில் வெடிகுண்டை புதைத்துவிட்டு போயுள்ளது சர்வதேச அளவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் உக்ரைன் பகுதியில் அதிக இழப்பை ஏற்படுத்தலாம் என ரஷ்ய துருப்புகள் திட்டமிட்டுள்ளது அம்பலமாகியுள்ளது.
மீட்கப்பட்ட சடலங்கள் அனைத்தும் கைகள் கட்டப்பட்ட நிலையிலும், மிக அருகாமையில் வைத்தே துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டுள்ளதும், கொடூரமான சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.
மட்டுமின்றி, உடல்களை பிளந்து, வெடிகுண்டை நிரப்பிச் சென்றுள்ள காட்டுமிராண்டித்தனம் தற்போது சர்வதேச அளவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக புச்சா மற்றும் ஹோஸ்டோமல் பகுதிகளில் இருந்து வெளியேறிய ரஷ்ய துருப்புகளே இந்த காட்டுமிராண்டித்தனத்தை அரங்கேற்றியுள்ளதும் அம்பலமாகியுள்ளது.
ரஷ்ய துருப்புகளின் படையெடுப்பில் மிகக் கடுமையான தாக்குதலை எதிர்கொண்ட பகுதி ஹோஸ்டோமல் என தெரிய வந்துள்ளது.
நகர மேயர் Yriy Pzylyko கொடூரமாக கொல்லப்பட்டதுடன், அவரது உடலிலும் வெடிகுண்டை புதைத்துள்ளனர்.
மேலும் கைப்பற்றப்பட்ட சடலங்களை அசைப்பதால், அந்த அதிர்வில் புதைக்கப்பட்டிருக்கும் வெடிகுண்டு வெடிக்கும் ஆபத்து இருப்பதாக உக்ரைன் இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புச்சா மற்றும் ஹோஸ்டோமல் பகுதிகளில் மட்டுமின்றி இர்பின் பகுதியிலும் ரஷ்ய துருப்புகள் இந்த கொடூரத்தை முன்னெடுத்துள்ளனர்.
சம்பவப்பகுதிக்கு நேரிடையாக சென்று பார்வையிட்ட ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, உடல்களில் வெடிகுண்டு புதைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்துள்ளார்.
மட்டுமின்றி, அப்பாவி உக்ரைன் மக்களிடம் உங்கள் மகன்கள் நடந்துகொண்டுள்ளதை தெரிந்துகொள்ளுங்கள் என ரஷ்ய தாய்மார்களுக்கு ஜெலென்ஸ்கி வேண்டுகோள் விடுத்தார்.
மேலும், ஒவ்வொரு ரஷ்ய இராணுவ வீரரின் ஒவ்வொரு தாயும் புச்சா, இர்பின், ஹோஸ்டோமலில் கொல்லப்பட்ட அப்பாவி உக்ரேனியர்களின் உடல்களைப் பார்க்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவர்கள் என்ன செய்தார்கள்? ஏன் கொல்லப்பட்டார்கள்? என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும் என ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைன் நகர மக்கள் உங்கள் ரஷ்யாவுக்கு எதிராக என்ன செய்தார்கள் என்பதால் இத்தனை கொடூரங்களை எதிர்கொண்டார்கள் எனவும் ஜெலென்ஸ்கி கேள்வி எழுப்பியுள்ளார்.