ரஷ்யாவுக்கு அதிகரிக்கும் நெருக்கடி.. ஐரோப்பாவின் அடுத்த அதிரடி திட்டம்..!

ரஷ்ய படைகள் பின் வாங்கியதாக கூறப்பட்ட உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் குண்டு காயங்களுடன் பலரின் உடல்கள் கிடப்பதாக கூறப்படுகின்றது. இதற்கிடையில் ரஷ்யா – உக்ரைன் இடையேயான பிரச்சனையானது தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.

ரஷ்ய படைகள் அவர்களை சித்ரவதை செய்து கொன்றுள்ளதாக உக்ரைன் அரசு குற்றம் சாட்டியுள்ளது.

ஆனால் இந்த குற்றசாட்டினை மறுத்துள்ள ரஷ்யா இது குறித்தான விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளது.

தங்கம் விலை சற்றே குறைவு.. முதலீட்டாளர்களுக்கு ஆறுதல் தான்.. எவ்வளவு குறைந்திருக்கு?

புதிய தடை

புதிய தடை

இதற்கிடையில் ரஷ்யாவுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. மேலும் ரஷ்யாவின் மீது புதிய சுற்று தடைகளை விதிக்கலாம் என்று எதிர்பார்க்கப்பகிறது. இது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் கடந்த திங்கட்கிழமையன்று அவசரமாக ஆலோசனை செய்ததாகவும் கூறபப்டுகின்றது.

என்ன தடை?

என்ன தடை?

மொத்தத்தில் ஏற்கனவே ஐரோப்பிய ஒன்றியம் பொருளாதார தடைகளை விதித்துள்ள நிலையில், தற்போது கூடுதலாக எந்த மாதிரியான தடையை விதிக்கப்போகிறதோ என்ற பெரும் கவலை எழுந்துள்ளது.

 

இது குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கைத் தலைவர் ஜோசப் போரெல், இந்த மோசமான சமயத்தில் உக்ரைனுக்கும், உக்ரேனியர்களுக்கும் ஆதரவாக நிற்கிறோம் என்று கூறியுள்ளார்.

நேட்டோ கூட்டத்தில் விவாதிக்கப்படலாம்
 

நேட்டோ கூட்டத்தில் விவாதிக்கப்படலாம்

AFP-யிடம் இது குறித்து ஐரோப்பிய அதிகாரி ஒருவர், ரஷ்யா மீதான புதிய சுற்று தடைகள் இந்த வாரம் விவாதிக்கப்படும். ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர், புதன் மற்றும் வியாழக்கிழமையன்று நடக்கவிருக்கும் நேட்டோ கூட்டத்தில் கலந்து கொள்ளலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் இது குறித்தான விவாதம் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

நூற்றுக் கணக்கான சடலங்கள்

நூற்றுக் கணக்கான சடலங்கள்

உக்ரைனின் சில நகரங்களில் இருந்து ரஷ்ய படைகள் வெளியேறியதாக கூறப்பட்ட நிலையில், அங்கு கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இப்படி நூற்றுக்ககணக்கான சடலங்கள் இருப்பதாகவும், உக்ரைனில் சர்வதேச மனிதாபிமான சட்டத்தை மீறியது மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு, ரஷிய ஆயுதப்படைகள் பொறுப்புக்கூற வேண்டும். இதை உறுதி செய்யும் அனைத்து நடவடிக்கைகளையும் ஐரோப்பிய ஒன்றியம் ஆதரிக்கிறது என தெரிவித்துள்ளது.

இதுவாக இருக்கலாமோ?

இதுவாக இருக்கலாமோ?

புதிய சுற்று தடை குறித்தான எந்த அறிவிப்புகளும் வெளியாகவில்லை என்றாலும், பலவிதமான யூகங்கள் வெளியாகி வருகின்றன. குறிப்பாக ரஷ்யாவின் முக்கிய வணிகமாக இருந்து வரும் எரிபொருள் வணிகத்தில் ஐரோப்பிய நாடுகள் நடவடிக்கை எடுத்தால், அது ரஷ்யாவில் மட்டும் அல்ல, சர்வதேச அளவில் மிகப்பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என்ற பதற்றமும் நிலவி வருகின்றது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

EU urgently discussing new sanctions on Russia after Ukraine enormity

EU urgently discussing new sanctions on Russia after Ukraine enormity/ரஷ்யாவுக்கு அதிகரிக்கும் நெருக்கடி.. ஐரோப்பாவின் அடுத்த அதிரடி திட்டம்..!

Story first published: Tuesday, April 5, 2022, 13:00 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.